உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழர் தம் போரின் முற்பட நிகழ்த்தும் 'வெட்சி' என்பது ஆதந்தோம்பலாம். ஆதருதல் மட்டுமன்று ஆ தந்து ஓம்பல் என்பதாம்.விருந்தோம்பல் என்னும் வள்ளுவ வாய்மொழி யையும் இவண் கருதுக. ஆவிற்கு நீரூட்டல் அருட் செயலுள் தலையாயதாக இருந்தமையால்தான் ஆவிற்கு நீர் என்று இரத்தலையும் சுட்டினார் வள்ளுவர். "யாவர்க்குமாம் ஆவிற்கு ஒரு வாயுறை" என்றார் திருமூலர்; வாயுறையாவது உணவு.

உயிரைப் 'பசு' என்பது வடவர் வழக்கம். தமிழர் அதனை 'ஆன்' என்றனர். ஆன் என்பது விலங்காதலின் அவ்விலங்குப் பொருள் சுட்டும் 'மா' என்பதை இணைத்து உயிரை ஆன்மா என வழங்கினர்.பரிமா,அரிமா, சரிமா, நரிமா என விலங்குகள் சுட்டப்படுதல்போல் ஆன் ஆகிய 'மா' 'ஆன்மா' எனப்பட்டதாம்.

இறைவன் பதி; உயிர்ஆன்மா; கட்டு பாசம்; இம்மூன்றும் தூயதமிழ்ச் சொற்களே, பாசம், பாசி என்பது இன்றும் வழக் காட்சியில்உள்ளது. நீரை மறைக்கும் பாசம்போல உயிரின் அறிவை மறைப்பதும் பாசம் என உவமையால் சொல்லப்பட்டதாம். நிற்க.

பலி

போற்றிக் காக்கத்தக்கதாம் பசுவைப் பலிப் பொருளாக்கல் 'குழவி பலி' என்பதைக் ‘குழவிப் பலி' யாக்கிக் குழந்தையைக் காவு கொடுத்தலாக வழங்கும் கொடுங்காட்சியை நினைவூட்டுவதாம். 'குழவி பலி' யாவது குழந்தைக்கு ஊட்டும் சோறு என்க. குழவிப் பலியாவது குழந்தையைக் காவு கொடுத்தலாம்.

வறுமைக்கு ஆட்பட்டவரின் குழந்தைக்கென, வளமானவர் சோறு வழங்குதல் பேரறமாகக் கொண்டு 'குழவி பலி'யைக் குறித்தனர் முன்னோர், ஆயினும் அதனைப் பிறழ உணர்ந்தார் பேயாட்டச் செயல், இந்நாள் வரைக்கும் தீர்ந்தபாடில்லையே! ஆன், கோன்

ஆனினம் போலும் அருந்துணை மாந்தர்க்கு ஒன்றுண்டோ? 'ஆ' வாகிய அஃது 'ஆன்' என னகர ஒற்றுப் பெற்று வழங்கும். அதுபோல் யகர ஒற்றுப்பெற்று 'ஆய்' எனவும் வழங்கும். ஆய் என்பது 'தாய்' என்னும் பொருட்டதாம்.

உயிர்களைக் காப்பவனாம் அரசன் 'கோ' எனப்படுவான். அவ்வாறே உயிர்களைக் காக்கும் ஆவும் 'கோ' எனப்படும்.