உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

63

உயிரைக் காக்கும் கடப்பாடுடைய வேந்தன் னகர ஒற்றுப் பெற்றுக் 'கோன்' என வழங்கப்படுவான். அவ்வாறே அவ்வானாம் உயிரைக் காவற் கடமை பூண்டவனும் 'கோன்' எனச் சுட்டப் படுவான்.

'கோ' தெய்வப் பொருளும் தரும். அதன் உறைவிடமே 'கோயில்' என்க. ஆக, 'ஆ' விலங்கே எனினும் தாயாகவும், தெய்வமாகவும் ஓம்பப்பட்டது என அறிவார் அதனைப் பலியூட்டவும் கருதுவரோ?

'ஆவுறிஞ்சு குற்றி' என்பது கல்வெட்டுகளில் காணப்படும் தொடர். அதன் பொருள் என்ன?

நம் உடலில் தினவு உண்டானால் நமக்குக் கை இருப்பதால் சொறிந்து தினவாற்றுகிறோம். மொழி வாய்ப்பு இருப்ப தால்கையெட்டா இடத்தின் தினவைப் பிறரைக் கொண்டு நீக்கிக் கொள்கிறோம். ஆடு, மாடுகளுக்குத் தினவு உண்டாயின் என்ன செய்யும்?

இவ்வினா அருளாளர் உள்ளத்து எழுந்தது. அதனால் அவற்றின் தினவை அகற்றிக் கொள்வதற்காக வழிகளில் தூண் களை நிறுத்தி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். வழியே செல்லும் ஆடு மாடுகள் தம் தினவைத் தூணில் தேய்த்துப் போக்கிக் கொள்ள வாய்ப்பாயிற்று.ஆடு, ஆண், காளை ஆகிய எல்லா வற்றுக்கும் அத்தூணம் உதவும் எனினும் அதனை அமைத்தவன் நெஞ்சம் ஆவில் தோய்ந்து இருந்தமையால் அதன் சிறப்புக் கருதி ‘ஆவுறிஞ்சுகுற்றி' என்றான். உறிஞ்சுதல், தேய்த்தல், குற்றி, கற்றூண், இவ்வாறு ஆனின் துயரைத் தன் துயராகக்கொண்டு போற்றிக் காக்க முந்தும் அருளாளன் நெஞ்சில் ஆக்கொலையும் அரும்புமோ?

பலி பீடம்

பலி பீடம், கொடி மரம் ஆகியவை பற்றிக் கருத்துச் செலுத் துகிறார் 'தமிழ்க் கா.சு.

9

"பலி பீடம் என்பது பிறர்க்கு அளிக்கும் அமுது வைக்கும் இடம். பலி - பிச்சைச்சோறு. பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன் என்ற இடத்துப் பலி அப்பொருளில் வந்தது காண்க அரசர்கள் அல்லது செல்வர்கள் வீட்டு வாயிலில் ஏற்பார் எல்லார் க்கும் உணவளித்தற்குரிய கலங்கள் வைத்திருத்தல் பண்டை வழக்கம். எல்லா உயிர்களுக்கும் படியளக்கின்றவர் கடவுள் என்று