உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

அறிவுறுத்தற்கும் பரிவார தேவதைகளுக்குரிய உணவு வைத்தற்கும் பலிபீடம் அமைந்துள்ளது. பலி என்ற சொல்லைக் கேட்டவுடன் அது வேள்வியிற் செய்யும் ஊன்பலி என்று எண்ணி விடுதல் தவறு."

இவ்விடத்தே ‘பூப்பலி செய்ம்மின்' என வரும் சிலம்பையும் (24:1:19; 28.231) அருச்சனை என அதற்குப் பொருள் விளக்கும் அரும்பத உரையையும் காண்க.

கொடி மரம்

"கொடி மரம், கொடி கட்டுவதற்குப் பயன்படுத்தியதே யன்றி யாகப் பசுவைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவதன்று. அங்ஙனமாயின் அதற்கு 'யூபம்' என்ற பெயர் இருத்தல் வேண்டும். எல்லாரையும் பாதுகாப்பதில் இணையற்றவன் என்று உலகினிற்கு அறிவிப்பதற்காகக் கொடி எடுக்கப் படுகின்றது. மலைவேடரும் முருகனுக்குக் கோழிக் கொடி எடுத்து அதனைத் தூணில் உயர்த்திக் கட்டித் திருவிழாக் கொண்டாடினரென்பது திருமுருகாற்றுப் படையால் இனிது விளங்கும். அல் போல அரசர்க் கரசனாகிய கடவுளுக்குக் கோயில் தமிழரால் அமைக்கப்பட்டது என்று அறியாத வேள்விச் சாலையின்படி என்று அதனைக் கூறுவது உண்மையை மறைப்பதாகும்.

இவ்விடத்தே கொடி நிலை பற்றி முன்னே உரைத்த செய்தியைக் கருதுதல் நலம். கொடியேற்றம் எனப் பெருவிழாத் தொடக்கமாகக் கோயில்களில் நடைபெற்று வருவதையும் கருதுதல் தகும்.

அரண்மனை என்பது அகழ், காவற்காடு, கோட்டை முதலிய பாதுகாப்புடைய வளமனையைக் குறிப்பதாம். அரசன் காக்கும் கடப்பாடு உடையவன். ஆதலால் அவன் காவற் கடவு ளாகவும் இறைவனாகவும் கருதப் பெற்றான். அதனால் இறைவன் கோயில் என்பவை காவலனுக்கும் கடவுளுக்கும் பொதுவயின.

அரசனுக்குரிய பரிவாரங்கள் போல இறைவனுக்கு அமைத் தலும், பள்ளி எழுச்சிப் பாடலும் ஆடல் பாடல் நிகழ்த்தலும், பிறந்தநாள் வெற்றிநாள் மணநாள் முதலாய விழாக் கோடலும், உலாக்கொள்ளலும் முதலாயவெல்லாம் இறைவனுக்கும் அமைந்தன. இவற்றை அரசனே முன்னின்றும் நடாத்தினான். இவ்வகை விரிவாக்கங்களால் கோயில் பொருள் வளம் கலை