உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

65

வளம் முதலாய வளங்களுக்கு உரிமையுடையதாகவும், விரிவுடைய தாகவும் வளர்ந்தது என்க.

பூசனை

கோயிலில் அமைந்த பூசனை, நீராட்டு, திருவிழா ஆகிய வையும் 'கா.சு' வால் எண்ணப்படுகின்றன.

எதிர்பார்த்த பயன் கிட்டாமை, எதிர்காலப் பயன் கருதுதல், இடையூற்றை நீக்குதல் ஆகியவற்றைக் கொண்டு மாந்தர் தெய்வத் துணையை நாடுவது இயல்பு என்றும், அவ்வாறு நாடுகின்றவர் அரசர் பெரியர் விருந்தர் ஆகியோர்க்கு விரும்பிச் செய்யும் மதிப்புச் செயல்போலத் தெய்வத்திற்கு வழிபாடு செய்வர் என்றும் அது பூசனை எனப்படும் என்றும் குறிக்கிறார்.

தெய்வத்திற்கு முன்னர் வட்டகை மூன்றில் வைக்கும் நீர்க்குரிய காரணத்தைச் சுட்டி விளக்குகிறார்: வெயிலில்வழி நடந்து வந்தவர்களுக்குக் கால்கழுவத் தண்ணீர் கொடுப்பது போலத் தெய்வத்திற்கு வைப்பது கழுவு புனல்: நீர்வேட்கையுடை யவர்க்குக் கொடுப்பது போல் வைப்பது பருகு புனல்; வெப்பந் தணியுமாறு தலையில் தெளிப்பதற்குக் கொடுப்பதுபோல் வைப்பது தெளிபுனல். இவற்றை வட மொழியாளர் பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் என்பர்; இவை தமிழர் வழக்கத்தில் இருந்து பின்னர் வடமொழி ஆகமங்களில் வரையப் பட்டவை என விளக்குகிறார். நீராட்டு

மணநீரில் செல்வர்கள் நீராடுவது போல், தெய்வத் திருவுருவுக்கு நீராட்டுதற்குத் திருமஞ்சனம் உண்டாக்கப்பட்ட வழக்கத்தையும் விளக்குகிறார். நெய், எண்ணெய், பால், தயிர், மாவுவகைகளை முழுக்காட்டுக்கு மாந்தர் பயன் படுத்தும் வழக்கத்தில் இருந்தே தெய்வத் திருமுழுக்காட்டு வளர்ந்த செய்தியையும் தெளிவிக்கிறார். இவ்வழிபாட்டு முறைகள் பண்டு தொட்டு வருவன என்பதைத் திருமுருகாற்றுப் படையின் வழியே உறுதிப்படுத்துகிறார். நிறை நாழி வைத்தல், கொடி நாட்டல், நெய்பூசல், நெஞ்சில்கை வைத்துக் கொண்டு தெய்வ உருவை நினைந்து கையால் பூச்சொரிதல், வெண்பொரி சிதறல், நீர் தெளித்தல், மாலை தொங்கவிடல், ஆடல் பாடல் நிகழ்த்தல், வாழ்த்துதல், ஒளிகாட்டல், மணியடித்தல், கொம்பு ஊதுதல் ஆகிய வழக்குகளெல்லாம் அம்முருகாற்றுப்படைக் காட்சியா தலுடன் இன்றுவரை தொடர்வதும் அறியக் கூடியவையாம்.