உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவிழா

இளங்குமரனார் தமிழ்வளம் 25

திருவிழா வெடுத்தல் மாந்தர்க்கு இயல்பாக அமைந்த நாடக உணர்வின்பாற்பட்ட தென்பதை நயமாகக் கூறுகிறார் கா.சு. திருவிழாவும், கொண்டாட்டமும் செல்வச் செழுமை காட்டு வதாகவும், உணவுப் பெருக்கம் காட்டுவதாகவும் இல்லாமல் அறிவுப்பெருக்கமும் உணர்வுப் பெருக்கமும் காட்டுவதாக அமைய வேண்டிய தம் வேட்கையையும் வெளிப்படுத்துகிறார். வீட்டுச் சடங்கு

தமிழர் வீட்டு வாழ்விலும் தெய்வம் சார்பான சடங்குகள் நிகழ்கின்றன. அவை குலதெய்வ வழிபாடு, பிறந்த நாள் கொண்டாட்டம், சோறு உண்பித்தல், காது குத்துதல், மயிர் கழித்தல், பள்ளிக்கு வைத்தல், சமயப் புகவாம் தீக்கை நடத்துதல், திருமண விழா, நீத்தார் கடன் கழித்தல் முதலியவை சுருங்கிய செலவில், நிகழ்த்தப் படவேண்டும் என்றும், இவ்விழாக்கள் அனைத்தையும் நடத்தாமல் தீக்கை திருமணம் இறுதிக் கடன் என்பவற்றை மட்டும் வேண்டிய அளவில் நடத்தினால் போதும் என்றும், இம் மூன்றும் தமிழ்க் குருக்களைக்கொண்டு தமிழ் முறையில் தமிழ் மொழியிலேயே நடத்தவேண்டும் என்றும் கா.சு. வலியுறுத்துகிறார்.

நோன்பு

கதிரவ வழிபாடாம் பொங்கல் விழாக் கொண்டாடுதலின் தகவை ஏற்கிறார். கொலையின் பொருட்டு மகிழ்வு கூர்வதாம் தீபாவளி தமிழர்க்கும் உரியதாகத் தோன்றவில்லை என விளக்கு கிறார். கார்த்திகை விழாவில் தெய்வ நினைவும் பட்டினி நோன்பும் புலனடக்கமும் நிகழ்வனவன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடலும் இல்லாமையால் அதனைக் கொண்டாடல் நலமெனத் தெளிவுறுத்துகிறார். அவ்வாறே திருவாதிரை, சிவனிரவு ஒன் பானிரவு முதலியன இயன்றவரை நோன்பு இருத்தலால் உடல் நலப் பயன் கருதி ஏற்பதால்கேடில்லை என விளம்புகிறார்.

இந்து மதம்

'இந்துமதம்' என்பது ஒரு மதமன்று என்பதைத் தடை விடைகளால் விளக்கி மெய்ப்பிக்கிறார் கா.சு.

“சிந்து நதிக் கரையில் இருந்தவர்களை ஹிந்துக்கள் என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை இந்துக்கள் என்று கிரேக்கர்கள்