உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

67

கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது."

"இந்து மதம் என்ற பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டை நூல்களில் கிடையாது. தற்காலத்தில் வட மொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வைதிகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்துள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானி மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்ற ஒரு மதமும் உண்டென்னலாம். அவை இலவாதல் போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது.

"வேதத்தையும் ஸ்மிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதமே இந்துமதம் என்றால் அது இந்தியாவிலுள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமேயன்றி அது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொது மதமாகாது. தற்காலத்தில் இந்தியாவில் தோன்றிய புத்தம் சைனம் வைதிகம் சுமார்த்தம் சைவம் வைணவம் முதலிய எல்லா மதங் களையும் இந்துமதம் என்று கூறுதல் பொருந்துமாறில்லை.

"வேத வாக்கியங்களுக்கு சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்றமுறையில் பொருள் கொள்ளுதல் பைபிளுக்கும் குரானுக்கும் சைவ வைணவப் பொருள் கொள்ளுதல் போலாகும்.

"தமிழ்ச் சைவ வைணவ சமயங்கள் அடிப்படையில் ஒத்த கருத்துடையன. சைவம் வைணவம் என இரு பிரிவடங்கிய ஒரு சமயத்தைத் தமிழர் சமயமென்று கருதி அதனைத் தமிழ் மக்கள் போற்றுவாராக.'

களாம்.

இவை கா.சு.கூறும் தமிழர் சமய நிலைப்பாட்டுச் செய்தி