உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6. தமிழர் மெய்க்கலை

தமிழர் மெய்க்கலை தனிப்பெருஞ் சிறப்புடையதாகும். ஒரு கலையின் சிறப்பு, அஃது எத்துணை மக்களுக்குத் தொடர்பும் அறிமுகமுமாகியுள்ளது என்பதைப் பொறுத்தும் மதிப்பிடப்படும். அவ்வகையில் ஆய்ந்தால் தமிழர் மெய்க்கலையின் மாண்பு நிகரற்று விளங்குகிறது.

எழுத்து

எழுத்து மொழிக்கு அடிப்படை அவ்வெழுத்துக்கும் அடிப் படை, அதன் பெயரீடு அப்பெயரீட்டிலேயே தமிழர் மெய்க்கலை பளிச்சிடுகிறது.

ஒன்றன் பெயரீடு பொருளுடையதாகவன்றி வேறு வகையால் அமைதல் தமிழில் இல்லை. ஏனெனில் தொல்பழ இலக்கணர் ஆணை, 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது. பொருள் குறித்தன்றி ஒரு சொல்லும் வாராது" என்று வரம்பு கோலிய பின் பொருளிலா இடுகுறி என ஒன்று உண்டோ?

.

ல்லையாம்; பின்னே இலக்கணர், வேற்று மொழியியல்பில் தோய்ந்து முன்னை மொழியாம் தமிழுக்கும் 'இடுகுறி என்ப தொன்றையேற்றியமை கொண்டு சொல் என்பது ஏதோ பொருட் சுட்டே யன்றிப், பொருளொடு கூடியதாகாது' என்று முடிவு செய்வது பிழையின்மேல் பிழையாய்ப் பெரும் பிழையாய் முடியும்.

தமிழ் எழுத்துகளில் உயிர் என்பது தலைப்பட்டது. மெய்யென்பது அடுத்து நிற்பது. இரண்டன் கூட்டத்தாலும் வருவது உயிர்மெய். இம் மூன்றையும் தவிர்ந்து நிற்கும் ஒரோ ஓர் எழுத்துத் தனிநிலையாம் ஆய்தம்.

உயிர் எழுத்துகளில் குறில் நெடில் என இருவகை. மெய் யெழுத்துகளில் வல்லினம் மெல்லினம் இடையினமென மூவகை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று கூடுதலால் உண்டாம் புணர்ச்சி; அப்புணர்ச்சி வகைகள்; உடம்படுமெய் இன்னவெல்லாம் தமிழர் தம் மெய்க்கலைவிளக்கமாக விளங்குகின்றது.