உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

69

'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. இளமையில் கல் என்பவற்றைக் கண்ட தமிழ்மண், எழுத்தை அறிமுகப்படுத்தும் நாளையிலேயே மெய்க்கலைப் பணியையும் இணைத்துக் கற்பிக்கின்ற அருமை எண்ண எண்ண இன்பஞ் சேர்ப்பதாம். இவற்றை ஆய்கிறார் கா.சு. உயிர்,மெய்

ஏனைய மக்கள், உடம்பினின்று உயிரை நன்கு பகுத்தறியாத காலத்தில் உயிரும் உடம்பும் வெவ்வேறு பொருளென்று தமிழர்கள் பகுத்து உணர்த்தினர். அப் பகுப்பு அக்காலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு உணர்த்தப்பட்டமையால் இலக்கண நூலிலும் அவை எழுத்துக்களுக்கு உவமையாகு பெயராயின.

'இலக்கண நூற்பாக்களிலே இலக்கண விதி கூறுமுகத் தானே உயிரின் இயல்பினை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

“உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ

உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான

என்ற சூத்திரம் உயிர் கலவாத பொருள்கள் அசையமாட்டா என்னும் உண்மையை உணர்த்திற்று உயிரில்லாத பொருளை இயக்குவதற்கு உயிர்ப்பொருள் இன்றியமையாத தென்பதைச் சுருங்கிய சொற்களால் பெற வைத்தார். உடம்பை இயக்கும் உயிர்போலச் சட உலகத்தை இயக்க ஒரு முதல்வன் வேண்டும் என்பது ஊகிக்கப்படும்.

"உயிர் உடம்பின் சார்பாகத்தான் விளக்கம் எய்தும். உடம் பிற்கு வேறாக உயிர் காணப்படாதது என்னும் உண்மையை உணர்த்த, 'மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' என்று சூத்திரம் அமைத்தார்.

'உயிர் உடம்பெடுத்தே விளக்கமடைய வேண்டியிருந் தாலும் உடம்பின் தன்மை வேறு; உயிரின் தன்மை வேறு; உடம்பு அறிவற்றதாய் இயக்கப்படுவதாய் நிலையில்லாததாய் இருப்பது; உயிரானது அறிவு, விழைவு, செயல்கள் உடையதாய்ப் பிறவற்றை இயக்குவதாய் நிலையுள்ளதாய் இருப்பது. உடம்போடு சேர்வதினாலே உடம்புமயமாய் நின்று பொருள்களை அறியினும் தன்னியல் பினை உயிர்இழக்காது என்ற உண்மையை விளக்கு வதற்காக,