உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

71

பொழுதுபோனால் கெடும் எளிய பண்டமொன்றை அதன் கேடு வருதற்கு முன்னேயே துய்த்துக் கொள்வது போலவும், கேடு விரைந்து வாராது காத்தற்காம் வழிகளையெல்லாம் சூழ்ந்து காத்துப் பயன்கொள்வது போலவும் நிலையாமை கருதி நிலைத் தக்க செய்தல் வேண்டும் என்பதே முன்னவர் மெய்ப்பொருள் நாட்டமாம். பொய்யாம் வாழ்வை மெய்ப்படுத்தத் துணையாவது உடலே ஆதலால் அதனை மெய்யென்றனர் என்க.

து

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே'

என்பது புறப்பாடல்

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

ஊதிய மில்லை உயிர்க்கு”

என்பது குறட்பா.

-

'செத்தாரைச் சாவார் சுமப்பார்' என்பது ஒரு பழமொழி. இப்பழமொழியின் புகற்சி என்ன? தானே இயங்கமாட்டாத கட்டை நிலைஒன்று வரும். அது வருதற்கு முன்னரே அது வரும் பொழுது இன்னதென் அறியக் கூடாமையால் அது வருதற்கு முன்னரே செயற் கருஞ் செயல்களைச் செய்து முடிக்க! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளல்போல் உடலாக்கம் உள்ளபோதே உரிய கடமைகளைச் செய்து நிறைவிக்க! என்பதாம்.

மறைமலையடிகள்

-

அறிஞர் கா.சு. எழுத்துகளை ஆய்வது போலவே அவர்க்கு முற்படவே ஆய்ந்தவர் மறைமலையடிகளார். தமிழ்,சமயம், சீர்திருத்தம் ஆகியவற்றில் அடிகளாரும் கா.சு.வும் ஒரு காசின் இருபக்கம் போல இருந்தனர் என்பது தகும். இந்நிலையில் அடிகளார் கருத்துகள் சிலவற்றை அறிந்து கொள்ளலும் ஆக்கஞ் செய்வதாம்.

அகரம்

உலகு உயிர்கட்குத் தலைவனான இறைவனதியல்பை உணர்த்துதற்கும் இவ் அகர ஒலியினையே எடுத்துக்காட்டுப். முதல்வன் இயல்பை உண்மையான் உணருங்கால் அவன் உலகுயிர் களின் வேறாய் அவற்றிற்கு முதல்வனாய் நிற்பன் என்பது புலப்படும். இனி, உலகுயிர்கள் அவனையின்றி இயங்காமையால் அவன்