உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

கோதண்டபாணியார்

73

திருக்குறளின் முதற்குறளாம் 'அகர முதல' என்பது பற்றிய ஆய்வு அறிஞர் கு. கோதண்டபாணியாரால்முதற்குறள் உவமை எனத் தனியொரு நூலாக எழுதப்பட்டது. அதில் முதல் என்னும் சொல்லாய்வைத் திருக்குறள் வழியாகவே ஆய்ந்து அதிலமைந் துள்ள மெய்ப்பொருள் நுணுக்கங்களை மிக அருமையாய் விளக்குகிறார்.

முதல் என்பது 'வேர்' என்னும் பொருள் தருதல் 'வாடிய வள்ளி முதலரிந் தற்று' (1034) என்பதாலும், கைப்பொருள் என்னும் பொருள் தருதல், முதலிலார்க்கு ஊதியமில்லை (449) என்பதாலும், எண்வரிசையில் முதல் என்னும் பொருள் தருதல், 'வளிமுதலா எண்ணிய மூன்று' (941) என்பதாலும், காரணம் என்னும் பொருள் தருதல், 'நோய்நாடி நோய்முதல் நாடி' (948) என்பதாலும் விளங்குவதைக் காட்டுகிறார்.

வேர் முதலை விளக்குகிறார் கோதண்டபாணியார்:

"முதலில் இருந்து முளை தோன்றுகின்றது. முளையிலிருந்து தளிர்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன; விரிகின்றன; பரவுகின்றன. இவ்வாறு முதலை அடிப்படையாகக் கொண்டு வளர்வன செடிகள் கொடிகள் மரங்கள் முதலியன. இவை பற்பல கொடிகள், பற்பல செடிகள், பற்பல மரங்களாக எங்கெங்கும் பரவுகின்றன. எங்கெங்கும் இவை நிலைத்திணையாக மிளிர்கின்றன.

64

"இத்தன்மையேபோல அகரமாகிய முதலிலிருந்து உயிர் எழுத்துக்கள் தோன்றின; உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றின; சொற்கள் தோன்றின; சொற்களின் தொடர்கள் தோன்றின; இவற்றாலான பற்பல நூல்கள் எழுந்தன. எங்கெங்கும் எழுத்துக்கள் பரவின; எழுத்துக்கள் எல்லாம் ஒரு தனி உலகமாய் மிளிர்கின்றன.'

"இத்தன்மையே போன்று கடவுளாகிய முதலிலிருந்து ஓசை,ஊறு,ஒளி, சுவை, நாற்றம் தோன்றின; இவற்றினின்றும் வான் வளி தீ நீர்நிலம் என்பன எழுந்தன; இவற்றினின்றும் உலகிற் காணும் இயங்குவன இயங்காதன உயிர் உள்ளன உயிர் இல்லன எல்லாம் தோன்றின. இவை எல்லாம் சேர்ந்து நாம் வாழும் உலகம் தோற்றம் அளிக்கின்றது.

"திருவள்ளுவர் கூறியவாறு முதலை அரிந்து விட்டால் வள்ளிக் கொடியில்லை; முதல் இல்லையேல் கொடியில்லை;