உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

செடியில்லை; மரமில்லை; நிலத்திணை உலகே இல்லை; அகர மில்லையேல் எழுத்தில்லை; சொற்கள் இல்லை; சொற்றொட ரில்லை; எழுத்து உலகமே இல்லை; கடவுளில்லை யேல் ஓசை யில்லை; ஊறு முதலியன இல்லை; வளி தீ நீர்நிலம் ஒன்றுமில்லை; உலகமே இல்லை; இவ்வுண்மைகளெல்லாம் முதல் என்ற சொல்லால் பெறப்படுகின்றன.

இவ்வாறே பிற முதல்களையும் செவ்விதின் விளக்கிச் செல்கிறார் கோதண்டபாணியார். இவ்விளக்கப் பகுதி மட்டும் பதினெட்டுப் பக்கங்கள் (132-149) வளர்கின்றன. ஆங்குக் கண்டு கொள்க.

கடவுளைப் பற்றிய சொற்கள்

எழுத்துகளின் 'குறியீடுகள்' வழியே மெய்க்கலை யாய்ந்த கா.சு. கடவுட் பொருட் சொற்கள் கொண்டும் மெய்க்கலை ஆய்கிறார்.

கடவுள் : எல்லவாற்றையும் கடந்த பொருள். இதனால் கடவுள் உயிரும் அன்று, உலகப் பொருள்களுள் எதுவும் அன்று அதனால் உலகப் பொருள்போல் அழிவது அன்று, காணப்படுவது அன்று, உலகெலாம் அறிதற்கு அரியது என்னும் கருத்துக்கள் தொடர்ந்தெழும்.

கடவுதல், செலுத்துதல் என்னும் பொருளுடைமையால், எல்லா உலகத்தையும் உயிர்களையும் உள்நின்று செலுத்துவது அப்பொருள் என்பது முடியும். கடந்து நிற்கின்ற பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு யாதெனில் நம்மை அது செலுத்து கின்றது அறிவிக்கின்றது என்பதனாலாகிய தொடர்பு பெறப்படும்.

இயவுள்: எல்லாவற்றையும் இயக்குகின்றவன். இறைவன்: எங்கும் தங்குபவன்; தலைவன். முனைவன் : உண்மை உணர்த்தும் குரு.

முதல்வன்: தலைமையானவன்.

ஆண்டவன் : உயிர்களை ஆட்கொண்டு நற்பேறளிப்பவன்.

ஐயன் : தலைவன், வியக்கத்தக்கவன்.

மெய்யன்: என்றும் ஒருதன்மையனாய் நிலைத்தவன்.

செம்பொருள்: செம்மையாகிய பேரின்பப் பெருவாழ்வு அருள்பவன்.