உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

அறிவன் : அறிவு வடிவானவன்.

பெருமான்: பெருமையுடையவன்.

பிரான் : வண்மையுடையவன்.

75

இவ்வாறு இறைவனுக்கு வழங்கும் சொற்களை எண்ணி அவற்றுக்குத் தக்க பொருள் விளக்கம் செய்துள்ளார்.

மனம்

உடல் மனம் உயிர் என்பவற்றைப் பற்றியும், அச்சொற் களாலும் அவற்றை ஆளும் தொடர்புகளாலும் பொருள் விளக்கம் கண்டு காட்டுகிறார் கா.சு.

வெளி உடம்பு, உள்ளுடம்பு, நுண்ணுடம்பு, காரண உடம்பு என்பவற்றை முறையே புறவுடம்பு, அகம், மனம், உள்ளம் என ஆய்ந்து கூறுகிறார்.

மன இயல்பு, உயிரியல்பு ஆகியவற்றை முற்றாகத் திருக்குறள் கொண்டே நிறுவிக் காட்டுவது சிறப்பும் செறிவுமுடையதாகத் திகழ்கின்றது;

மனத்தின் குண இயல்பு (706,457) மனச்சான்று (263) நினைவாற்றல் (1204-5) அறிவின் உறுதி (661,1299) உணர்ச்சி நிலை (53) பகுத்தறிவு (1242) உண்மையை மறைக்கும் நிலை (288) உன்ன ஆற்றல் (1310) ஊக்க எழுச்சி (1264) தீராக் கவலை (1295) காலத்தால் வருத்துதல் (1226) அசைவின்மை (917) பலபிறப்பினும் நினைவு (107) பல்காலும் நினைவு (1125) உள்ளறிவு (1277, 1278) ஐயம் (1081) திரிவு (112) என்னும் மனவியல்புகளைக் குறளொடும் பொருளொடும் கூட்டி இயைக்கிறார்.

அன்றியும், ஆசையினால் விரும்பாதவரையும் பின்பற்றுதல், ஆசையினால் செல்லாவிடத்தும் முயற்சி செய்தல், விரும்பி னோரைக் கண்டபோது அவர்கள் குற்றம் தோன்றாமை முதலிய பல இயல்புகள் மனத்தின் மீது வைத்துப் பல குறள்களில் உணர்த்தப்பட்டதையும் சுட்டுகிறார். மனத்தின்மீது வைத்துப் பேசும் இயல்புகள் எல்லாமும் உயிரின் குணங்களே எனத் தெளிவிக்கிறார்.

ஆய்வுத் திரட்டு

உயிர் அழியாதது என்பது மாயாஉயிர் (1230) மன்னுமுயிர் (190) என்பவற்றாலும், உயிர்கள் பல என்பது எல்லா உயிரும் (260)