உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சொல்லாக்கம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

கடவுள் உயிர் மெய் என்ற பழந்தமிழ் வாய்பாடு பதி பசு பாசம் எனப்பட்டதையும், ஒலி முதல், ஒளி முதல், ஓம், கலைமூலம் என்பவற்றையும் தமிழ் வேதம் மந்திரம் கலை இறையுரு தொன்மம் முதலாய பலவற்றையும் ஆகமங் கூறும் முதல்கள் (தத்துவங்கள்) என்னும் பகுதியில் ஆய்கிறார். அப்பகுதியில் பெருவழக்காகவுள்ள வட சொற்கள் பலவற்றுக்குத் தமிழாக்கம் வழங்குகின்றார். அவர் தம் பன்மொழிப் புலமை அப் படைப்புகளால் இனிது விளங்கு கின்றது. அதேபொழுதில் அவர்தம் தமிழூற்றமும் சமய அழுத்தமும் புலப்படுகின்றன.

அசுத்த மாயை - தூயதல்மாயை ஆங்காரதத்துவம் உன்னமுதல் இச்சா சக்தி விழைவாற்றல் கலாதத்துவம் கலை முதல்

-

கால தத்துவம் காலமுதல் கிரியா சக்தி - செயலாற்றல் குண தத்துவம் - பண்பு முதல் சித்தர் -அறிவர்

சுத்தமாயை - தூயமாயை

சுத்த வித்தை - தூயபுலம்

ஞான சக்தி -அறிவாற்றல்

தத்துவார்த்தம்- மெய்மைப் பொருள்

நாத தத்துவம் ஒலி முதல்

நியதி தத்துவம் -ஊழ் முதல் பசு-உயிர்

பதி - இறை

பாசம்-தளை

புத்தி தத்துவம் - தெளி முதல்

விந்துதத்துவம் உருமூல முதல்

இவ்வாறே பிற பகுதிகளிலும் தமிழக்கலைச் சொல்லாக்கம் புரிந்துள்ளார். அவர்தம் ஆக்கச் சொற்கள் தனி ஆய்வுக்குரியதாம். தமிழர் சமயம், தமிழர் வாழ்வியல் ஆகியவற்றில் கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் எவை என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.