உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சீர் திருத்தம்

சீர் என்பது சிறப்பு, புகழ், அழகு, நன்மை, செம்மை, நடுவு நிலைமை முதலாய பல பொருள்களைத் தரும் சொல்லாகும்.

சீர் என்பது சீர்த்தி எனப்படும். அதனைச் 'சீர்த்தி மிகு புகழ்' என்றார் தொல்காப்பியர். அச்சீர்த்தி, ‘கீர்த்தி' என மாறியதுடன் வேற்றுச் சொல் எனவும் மயங்க வைத்தது.

திருத்தம் என்பது ஒழுங்குபடுத்துதல்; திருத்தி அமைத்தல் எனப் பொருள்படும்.

சீர் அமைந்திருந்த ஒன்று சீர்கேடு அடைந்தபோது, மீண்டும் அதனைச் சீரிய நிலையில் ஆக்கி வைத்தலே சீர்திருத்தம் ஆகும். நாடுதல்

தமிழர் சமயத்தில், தமிழர் நெறியில் சீர்கேடுகள் நேர்ந்துளவா? அவ்வாறாயின் அவை முன்னே சீராகத் திகழ்ந்தமைக்குச் சான்று உண்டா? சீர்கேடுகள் எப்படி நிகழ்ந்தன? அவற்றைப் போக்கும் வழியென்ன என்றெல்லாம் எண்ண வேண்டும். ஏனெனில் ஒரு நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டுமெனின், “நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்" வேண்டும் என்பதுபோல், சீர்கேட்டு நோயைத் தீர்த்துச் சீராக்கம் புரியவும் இவ்வாய்வுகள் எல்லாமும் வேண்டத் தக்கனவேயாம். நடைமுறைக் கேடு

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று முழக்கமிட்டது திருக்குறள். "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றது திருமந்திரம். "சாதியாவதேதடா" என வினாவியது அறிவர் (சித்தர்) பாடல். ஆயினும் என்ன? சாதிப் பிரிவு பெருகுவதன்றிச் சிறுகுதல் இல்லை!

கல்வியால் சாதி ஒழியும் என்பது ஆய்ந்தோர் முடிவு. ஆனால் அக்கல்வி மெய்க்கல்வியாக இல்லாமையால், கற்றோரே