உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சாதி வளர்ச்சிக்கு நிலைக்களனாக உள்ளனர். அதற்கு அடிப்படை, கற்றவர்கள் கட்டுக் கோப்போடு கட்டி வைத்தது சாதி ஆதலால் அஃதகலும் பாடில்லை. அரசியலும் ஆட்சியும் சாதியைச் சார்ந்தே இயங்கும் நிலையில் சாதிக்கு ஒழிவு வருமோ?

விலங்கின் சாதி, பறவைச் சாதி என்பனவே தொல்காப்பி யத்துக் காணும் சாதி, பகுத்தறிவிலா உயிரிக்கு அமைந்த சாதி, அப்பகுத்தறிவு இருந்தும் பகுத்தறியா மாந்தச் சாதியாய்க் கொடி கட்டிப் பறக்கிறது.

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே

பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே'

""

என்று, கபிலர் அகவல் பாடினாலும்,

"எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை"

என்று பாரதி பாட்டுக் கிளர்ந்தாலும்,

"ஆயிரம் உண்டிங்குச் சாதி”

என்னும் நடைமுறை மாறாமலேயே உள்ளது.

மாற்றியமைக்க வேண்டிய கற்றோரும், சமயச் சால்புடை யாரும், அரசியல் அறமுடையாரும் அவர்களின் எதிரிடைப் போக்கால், வெறிகொண்டு மிகுந்தே வருகின்றது. பொது நலம் கருதாமல் தந்நலக் கருத்திலேயே கற்றாரும், சமயத்தாரும், ஆட்சி யாரும் செல்லும் நாட்டில் நன்மாற்றம் நோக்கக் கூடுமோ?

"முதல்வன் அருளால் உயிர்பிறப்புற்றது. அவனருளாலே அவனை அடையவேண்டுவது அவ்வுயிர்."இது சமய உட்கிடை என்றால், மாந்தர்ப் பிறப்பில் ஏற்றத் தாழ்வு காண்பார் சமயச் சால்புடையரோ! குலப்பாகு பாட்டில் குலவுதல் சமயம் என்றால், அச்சமயத்தின் நோக்கும் போக்குமே தகவு என்றால், அத் திட்டத்தையே தீண்டத்தகாதார், காணத்தகாதார் என்பாரும் ஏற்றுக் கொள்ளுவதே சமயச் சால்பு என்றால், அச் சால்பை ஏற்றுப் போற்றுதலே தமக்குப் பிறப்புரிமை என மீளா அடிமைக்கு ஆட்பட்ட வரும் நினைக்கின்றனர் என்றால் எளிதில் சாதி ஒழியுமோ?