உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

வண்ணப் பிரிவு

81

வண்ணப் பிரிவு என்னும் சாதிக்கொடுமை ஒரு வழியிலா கேடு செய்துள்ளது? செய்து வருகின்றது? நந்தனார் அடிமைத் திறமும் திருப்பாணர்கள் இசைத்திறமும் ஊரறியப் பேசிக் கொண்டும் போற்றிக் கொண்டும் உள்ளறியத் தாழ்த்திக்கொண்டும் தடுத்துக் கொண்டும் இருப்பது நாட்டு நாடகமாயிற்று; நடை முறையாயிற்று.

இறைவன் தந்தை என்றும், மக்களெல்லாரும் அவன் மக்கள் என்றும் சொல்லிக் கொண்டு சாதிச் சுவர்களை எழுப்பி எழுப்பி அப்பால் நிறுத்தியும், அப்பாலுக்கு அப்பால் நிறுத்தியும் வைக்கச் சமயம் தூண்டி வைத்தது என்றால், அச்சமயம் வளர்ந்த சாதியின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட சமயமே யன்றிப் சால்புச் சமயமன்றாம்.

ஏணிப்படிபோல் சாதிகளை ஆக்கி வைத்ததன் பயன் என்ன? நான் கீழிற் கீழாய்க் கிடக்கிறேன் என்னும் எண்ணவுரிமையும் அறியாராய்ப் பெரும்பான்மை மக்கள் வீழ்ந்து கிடக்க நேரிட்டு விட்டதாம். இந்நிலையில் கலப்பு மணம் வரவேற்கப்படுமா? உடனுண்ணல் ஏற்கப் படுமா? நாட்டுக்கு உய்வும் உண்டோ? உண்டோ?

வழிபாட்டு மொழி

இன்பபாகுபாடு இம்மட்டில் ஒழியுமோ? சமயத்தின் மேலாண்மையராய்க் கோயிலாட்சியைக் கையில் கொண்டிருந்த உயரினத்தால், தம்மொழியை உயர் மொழி யென்றும், தேவ மொழியென்றும் அத் தேவ மொழியிலேயே ஓதுதல் வேண்டு மென்றும் திட்டமிட்டுக் கேடு புரிந்தனர். அதன் விளைவு இன்று வரை மண்ணின் உரிமை மொழியாம் தமிழ், கோயில் மொழியாக முடியவில்லை. அடிமையர் மொழியாய், தீண்டத் தகாதவர் மொழியாய், வட்டார மொழியினும் கீழ்மொழியாய் உயிர் மட்டில் தாங்கிக் கொண்டுள்ளது.

தமிழ் ஞானசம்பந்தர், அப்பரடிகள், தம்பிரான் தோழர் மணிமொழியார், நம்மாழ்வார், பெரியாழ்வார், காரைக்காலார், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் இவர்களினும் தூயரா - அன்பரா இறைமை வாய்ந்தவரா - நாவசைப் பளார் மணி அசைப்பாளர்!

-