உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

நூல் வழக்கிலும் காணப்படும் வடசொற்களுக்குத் தூய செந்தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து காட்டுதல் நன்றென்று கருதிப் பின்வருமாறு அகரவரிசை முறையாக எழுதப் புகுந்தாம். வடசொற்களுக்கு இதன்கண் காட்டப்படும் தமிழ்ச்சொற்களை விட இன்னுந் திறமான தமிழ்ச்சொற்களை எவரேனும் தெரிந்து எமக்குத் தெரிவிப்பார்களாயின் அவற்றை அவர்கள் பெயருடன் நூலில் வெளிப்படுத்துவாம்."

திருவரங்கர் எப்படித் தனித்தமிழ்ப் பற்றாளரோ அப்படியே சைவநெறிப் பற்றாளராகவும் திகழ்ந்தார். இன்னும் சொல்லப் போனால், சைவத்தின் ஊற்றம் தமிழ் ஊற்றத்தினும் மிக்கிருந்தது என்றும் கூறினோம். நுண்கலைச் செல்வர் அ. அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார்கள்:

ராகவன்

“1923ஆம் ஆண்டு நெல்லையில் சுயமரியாதைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத் தொடக்க விழாவைத் திருவரங்கனார் அவர்களே முன்னின்று நடத்தி வைத்தார். அவ்வியக்கப் பத்திரிகையை ஞானியார் சுவாமிகள் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கம் சைவ சமயத்தைத் தாக்கியது. திருவரங்கனார் அவர்கள் அவ்வியக்கத் தொடர்பை அறுத்துக் கொண்டார். சைவ அன்பர்கள் பலரையும் அதில் பங்கு கொள்ளாது தடுத்தார்.”

ராகவனார் சுட்டும் குறிப்பு அரங்கனாரின் சைவநெறி அழுத்தத்தைப் புலப்படுத்துகின்றதன்றோ! தொடர்பை அறுத்துக் காண்டதைச் சைவப்பற்று எனின், ‘தடுப்பு' இருக்கிறதே அது சைவ அழுத்தத்தைக் காட்டத் தவறாதே! 'தடுத்தாட்கொண்ட படலம்’ திருத்தொண்டர் புராணம் கண்டதாயிற்றே! தொண்டர் சீர் பரவுவார் பாடியது ஆயிற்றே! வேறென்ன வேண்டும்?

29-3-1929 முதல் 31-3-1929 முடியத் திருநெல்வேலியில் 'சைவப் பெரியார் தனிக் கூட்டம்' ஒன்று நடந்தது. அதன் தலைமையைச் சைவத் திருவாளர் ச. சச்சிதானந்தம் பிள்ளை ஏற்றிருந்தார். தமிழ்நாட்டின் பகுதிகளாகிய தொண்டைநாடு, சோழநாடு, சேரநாடு, பாண்டிநாடு, நடுநாடு, கொங்குநாடு ஆகியவற்றில் இருந்தும் ஈழநாட்டிலிருந்தும் பெருமக்கள் வந்திருந்தனர். அதன் பொருளாய்வுக் கூட்டம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைமை நிலையத்தில் நிகழ்ந்தது. பொதுக்