உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

87

கூட்டம் கணபதி விலாச நாடக அரங்கில் நிகழ்ந்தது. அரங்கர் பங்கு பெரிது! 'சமயச் சால்பு’ அக் கூட்டத்தின் தீர்மானங்களில் பொதுளிப் பெருமை செய்வதாய் உள்ளது (செல்வி 7 : 183 - 192).

இலால் குடி நாட்டாண்மைக் கழக உயர் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகத் திகழ்ந்த பெருஞ்சொல் விளக்கனார் அ. மு.. சரவண முதலியார் அவர்களை அழைத்து நெல்லையில் 14-5-30 முதல் 5-6-30- முடியப் பல்வேறு தலைப்புகளில் பெரிய புராணச் சொற்பொழிவு நிகழ ஏற்பாடு செய்தார் திருவரங்கர். 14-5-30 முதல் 17-5-30 முடிய அமைந்த நான்கு நாள்களிலும் ‘தடுத்தாட் காண்

அதன்

புராணம்’ விரித்துரைக்கப்பெற்றது. பொறுப்பைக் கழகச் சார்பில் அரங்கர் ஏற்றுக்கொண்டார். எஞ்சிய நாள்களின் சொற்பொழிவுகளுக்குப் பல்வேறு அமைப்புகளைப் பங்கேற்றுச் சிறப்பிக்க ஏற்பாடும் செய்தார். இம் முயற்சியும் நடைமுறையும் புதுவது கவினும் திறத்ததாய் அமைந்தது. இவ்வாறே பிற நகரங்களிலும் ஏற்பாடு செய்யு மாறும் வேண்டுகோள் விடுத்து வழிகாட்டினார் திருவரங்கர்.

1933ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 23, 24ஆம் நாள்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழன்பர் மாநாடு என்னும் மாநாடு கூடிற்று. அம் மாநாட்டின் அழைப்பிதழே 'தமிழன்பர் மாநாடு' எத்தகையது, எவ்வாறு நடைபெறும் என்பவற்றை எடுத்துக் காட்டியது. எண்ணற்ற வட சொற்களைப் பெய்து வெளிப்பட்ட தமிழன்பர் மாநாட்டு அழைப்பிதழ் தனித் தமிழ்த்தோன்றல் தவத்திரு மறைமலையடிகளார்க்கும் விடுக்கப் பெற்றது. மாநாட்டு முதன்மையர். திரு. கே.வி. கிருட்டிணசாமி ஐயர், அடிகளார்க்குத் தொலைவரியில் “தயை கூர்ந்து தமிழன்பர் மாநாட்டுக்கு வரவேண்டும் எனத் தங்களைப் பரிவுடன் வேண்டுகிறேன்” என்று அழைப்பும் விடுத்தார். ஆனால் அடிகளாரோ ஏற்றார் அல்லர்.

6

66

“எனக்கு அனுப்பி வைத்த கடிதங்கள், அழைப்புகள், தொலைவரி முதலியவற்றிற்காகத் தங்களுக்கும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும் நன்றி செலுத்துகின்றேன். தமிழ்மொழியின் தூய்மையைப் பாதுகாத்து முன்னேற்றுங் கருத்தில்லாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலுங் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை யென்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டைக் காலச் செம்மொழிகள் பலவற்றுள்ளும் தமிழொன்றே தன் தனிப் பெருமையை இற்றை நாள் வரை இழவாதிருந்து வருகிறது. பிறமொழிச் சொற்களைக்