உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

கலத்தலால் தமிழ்மொழியின் தூய்மைநலங் கெடுவதோடன்றி அதன் வளர்ச்சியுரனும் தடைபடு மென்பதே என்னுடைய முடிந்த முடிபாகும். எனவே அம் முடிபுடன் ஒவ்வாததாகத் தோற்றும் உங்கள் கூட்டத்திற்கு நான் வராமைக்குப் பொறுத் திடுக” என வரைந்தார் (செந். செல். 12: 244-5),

தமிழன்பர் மாநாட்டில் அடிகளார் மட்டுமோ கலந்து கொள்ளவில்லை! அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சைவப் பெரியார் ச. சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியவர்களும் கலந்துகொள்ளவில்லை.

ள்

தமிழன்பர் மாநாட்டின் விளைவாகத் திருநெல்வேலியில் சன்னை மாகாணத் தமிழர் மாநாடு 1934 ஆம் ஆண்டு சூன் திங்கள் 10, 11 ஆம் நாள்களில் கூடியது. சென்னை மாகாணத் தமிழர் சங்கம் என்னும் ஓர் அமைப்பும் உருவாகியது. தமிழவேள் உமாமகேசுவரனார், மறைத்திரு மறைமலையடிகளார், அமைச்சர் தி. பொ. இராசன், அமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார், நாவலர் ச. சோமசுந்தரபாரதியார், அறிஞர் கா. சு. பிள்ளை முதலிய பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். சங்க அமைச்சராகப் பெரும்புலவர் இ. மு. சுப்பிரமணியபிள்ளை தேர்ந்தெடுக்கப்பெற்றார். கழக இரட்டையராம் வ. திருவரங்கர், வ.சுப்பையாபிள்ளை ஆகியவர்கள் அரவணைப்பில் சிறந்த பணி செய்தது. அதன் முரசமாகச் செந்தமிழ்ச் செல்வி திகழ்ந்தது. 1937 இல் இந்தி நடுத்தரப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கப்பெற்றது. தமிழ்மொழியை அயன்மொழித் தாக்கத்தில் இருந்தும் காப்பதற்காக 29-8-37 இல் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கச் சார்பில் நடத்தப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ‘தமிழ்ப் பாதுகாப்புச் சங்கம், திருநெல்வேலி' என்னும் பெயரில் சங்கம் ஒன்று தொடங்கப்பெற்றது. அதன் தலைவராகச் சிந்துபூந்துறை மா. வே. நெல்லையப்பபிள்ளையும் அமைச்சர்களாகப் பாளையங் கோட்டை சோ. சிவஞானதேசிகர், சாத்தூர் வழக்கறிஞர் தூ. சு. கந்தசாமி முதலியார், கழக அமைச்சர் திருவரங்கம்பிள்ளை ஆகியவர்களும் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். 3-9-’37 இல் ஆய்வுக் கூட்டமும் 5-9-’37 இல் ஊர்வலமும் நடாத்தப்பெற்றன. “தமிழைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு விடுத்தனர். பின்னர் 3-12-37 இல் சிவஞானமுனிவர் நூல்நிலையத்தில் நடைபெற்ற தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தில் தமிழர் கழகம் நிறுவி அதற்குரிய விதிமுறைகளும் வகுக்கப்பெற்றன (செந், செல் 16 : 210-11).

.