உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. இடுக்கண் அழியாமை

இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல், கோடையும் குளிரும் மாறிமாறி வருவதுபோல், இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறிமாறி வருவனவேயாம். ஆனால், இன்பத்தை மாந்தர் விரும்புவதுபோல் துன்பத்தை விரும்புவது இல்லை; துன்பத்தை விரும்பாதொழியினும் வெறுக்காமல் இருப்பதும் இல்லை. இன்பத்தை விரும்பும் மாந்தர், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துன்பத்தை ஓரொருகால் அடையாமல் தீராது. துன்பம் என்பது வாழ்வை ஒழுங்குறுத்தவும் வளமாக்கவும் இயற்கை தந்த கொடை. அக் கொடையைக் கொடை யென்று குறிக்கோளாக்கிக்கொண்டவர்கள், வாழ்வில் வெற்றி காண்கிறார்கள். மற்றையோர் துன்பம் வருமுன்னரே துவண்டு போய் அலைக்கழிந்து தம் ஆற்றலையும் இழந்து அல்லல் படுகின்றனர். துன்பத்தை எதிரிட்டு நின்று வெற்றிகொள்ள வல்லவரே வாழ்வியல் உண்மையை உணர்ந்த உரவோர் ஆவர். சுடர் எப்படிக் கிளம்புகிறது! சுட்டெரிவதால் அல்லது எரிப்பதால் சுடர் கிளம்புகின்றது. சூடு பிறக்காமல் சுட்டெரியாமல் எச் சுடரேனும் சுடர்வதுண்டோ? கதிரானால் என்ன? விண்மீன் ஆனால் என்ன? மின்சாரம் ஆனால் என்ன? மெழுகுதிரி, விறகு, கரி முதலியவை ஆனால் என்ன? சுடப்பட்டதே சுடர் தருகின்றது. துன்பத்தால் சுடப்பட்டவர்களே சுடர்விடும் பெருமக்கள் ஆகின்றனர். “சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம். சுடச்சுட நோற்கிற் பவர்க்கு” என்னும் வள்ளுவர் வாய்மொழி இவ் வுண்மையை உவமைகொண்டு செவ்விதின் விளக்குவதாம்!

அறுத்து, அவித்து, இடித்து, ஆட்டி, வெதுப்பி ஆக்காமல் சோறு வருமோ? ஒடித்து நறுக்கி ஆட்டி நைத்து வடிக்காமல் கரும்பின் சாறு கிட்டுமோ? தொல்லைக்கும் துயருக்கும் தொய்ந்தவர்கள் துணிந்து முன்னேற்றம் காண்பரோ? துலங்கும் வாழ்வினராயப் போற்றப் பெறுவரோ?

அரங்கர் தம் கைம்முதலைக்

காண்டோ

கழக

நிறுவனத்தைத் தொடங்கினார்? கூட்டுப்பங்கு நிறுவனம்தானே