உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அது? பங்காளிகள் பலருள் அவரும் ஒருவர்தாமே! நிறுவன ராகவும் பொறுப்பாளராகவும் இருந்தமைதாமே அவர்தம் சிறப்புநிலை! ஆனால், ஆட்சிக்குழு என ஒரு குழு உண்டே! அக் குழுவின் ஆணையை ஏற்றுப் பங்காளிகளாம் பொதுக் குழுவின் தீர்மானத்தைத் தழுவிக் கடமை யாற்றுவதன்றோ அவர்தம் முதன்மையான பணி! பொதுக்குழு ஆட்சிக்குழு ஆகியவற்றுள் இருப்போர் அனைவரும் ஒத்த உணர்வினர் ஒருநோக்கினர் என்று கூறவொண்ணுமோ? குடும்பத்துக்குள்ளேயே, உடன்பிறந் தார்க்குள்ளேயே எத்தனை எத்தனை பிணக்குகள்! சண்டைகள்! முரண்பாடுகள்! ஆனால், ஒரு கூட்டுப்பங்கு நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் அனைவரும் பங்காளிகளாம் உரிமையமைந்த நிறுவனத்தில் வேறுபாடு வராமல் இருக்குமோ? இரண்டு கருத்து ஏற்பட்டுப் பொறுப்பாளர்கள் இரண்டாகித் தன்முனைப்புடன் செயலில் இறங்கிவிட்டால் கூட்டுப் பங்கு நிறுவனம் ஆட்டம் கொடுக்காமல் தீருமா?

கழகப் பணியையே தம் முழுப்பணியாகக் கொண்டு தொடக்க நாள் முதல் பணி செய்து வந்தவர் திருவரங்கர். அவரொடும் அமைச்சராக இருந்தவர் திரு.மா. திரவியம் பிள்ளை. அவர் நான்காண்டுகளே உடனமைச்சராக இருந்து இயற்கை எய்தினார்.அதற்குப் பின் அவர்தம் மைந்தர்கள் உடன் அமைச்சராக இருக்கும் பொறுப்பேற்றனர். ஆனால் கருத்துடன் பாட்டுடன் பணி நிகழவில்லை. செயன்முறைகளிலும் இடைவெளி யுண் ண்டாயிற்று. எதிரிடையும் ஏற்பட்டது. கழகப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகத் திருவரங்கர் மேல் பழி சூட்டினர். அதனை ஆய்ந்து உரைக்குமாறு கழகத்தில் நிறைவேற்றற் கழகத்தார் ஊர் உட்கழகத்தை நிறுவினர். அவர்களும் ஆய்ந்தனர். குற்றச்சாட்டு உண்மை இல்லை' என்றும், ‘அதனை உறுதிப் படுத்தும் சான்று இல்லை' என்றும், தெளிவுசெய்து உட்கழகத் தார் நிறைவேற்றற் கழகத்தார்க்கு அறிவித்தனர். அவ்வளவில் முரண் தீர்ந்துவிடவில்லை. அறிக்கையும் எதிர் அறிக்கையும் விடும் அளவுக்கு வளர்ந்தது.

கருத்து வேறுபாடும் வெறுப்பும் குற்றச்சாட்டும் அறிக்கை வெளியீடும் தொடர்ந்தபின் ஒன்றைத் தொட்டு ஒன்று வளருமேயன்றி ஒழியாது. அவரைச் சார்ந்தும் வரைச் சார்ந்தும் எனக் கூட்டம் இரண்டுபட்ட பின்னர்த் திறமை மிக்கவர்களாலும் ஈடுகொடுப்பது அரிதேயாம். இந் நிலை வளர்ந்து வரினும் அரங்கர் கழகப் பணியை இடையறவுபடாமல்