உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

91

செய்துவந்தார். கழகப் பங்கு சேர்ப்பதற்காகவும், புத்தக விற்பனைக்காகவும் கொழும்புக்குத் திருவரங்கர் 1929 இல் சென்றார். அப்பொழுது பழைய பூசல் மிகத் தலைதூக்கிய யது; கழகத்தின் உண்மை வரலாறு' எனத் துண்டு வெளியீடு ஒன்றும் வெளிப்பட்டது.

மா.

ஆக்கப் பணிக்கெனத் தொடங்கிய கழகம் அழிபகையில் சிக்கிக் கொண்டது நல்லவர்கள் சிலர் உள்ளத்தை நலித்தது. அந்நாள் கழகத் தலைவராக இருந்தவர் திரு. வே. நெல்லையப்பபிள்ளை ஆவர். அவரும் கழகத்தின் பங்காளி களுள் ஒருவரும் கொழும்பில் இருக்கும் திருவரங்கருக்குக், கழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையைத் தொலைவரிச் செய்தி வழியே தெரிவித்து, உடனே நெல்லைக்கு வருமாறு செய்தனர். திருவரங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது! கட்டிக் காத்து வந்த கழகத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டினை ஒழிக்க வேண்டும் என்றும், உண்மை நிலையைப் பங்காளிகள் உணர வேண்டும் என்றும் உன்னினார். உரிய முயற்சிகளை மேற்கொண்டார்.

குற்றம் என்று சாட்டினால், இல்லை என்பதை மெய்ப் பித்துத்தானே ஆக வேண்டும்! அதிலும் பொது அமைப்பில் பங்காளிகளாக இருக்கும் அனைவருக்கும் உண்மைநிலையை விளக்கி உறுதிப்படுத்தித்தானே ஆக வேண்டும்! தணிக்கைக்கு ஏற்பாடு செய்து, கணக்குச் செவ்வையாக இருப்பதை மெய்ப்பித்து ஆயிற்று. நிறைவேற்றற் கழகத்தார்க்கும் குற்ற மின்மை உறுதியாயிற்று. அவர்களே பொய்க் குற்றச் சாட்டை மறுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால் எளிதில் தீர்ந்துவிடும் அன்றோ!

அரங்கர் கழகக் கடமைகளைக் கருத்தாகச் செய்யவில்லை என்னும் குற்றச்சாட்டு மிக மிகப் புண்படுத்தியது அவரை! ஏன்? கழகப்பணி யொன்றன்றி வேறு பணி அவர்க்கு இல்லையே! அதிலும் குற்றம் சாட்டுபவர் தம்மினும் பேருழைப்பாளராக இருப்பினும் எப்படியோ போகிறது என்று ஒழியலாம். அப் பணியை ஒதுக்கி, ஒதுங்கியவர் தம்மைக் குற்றம் சாட்டியதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனைப் பொய்யாக்கற்குச் சான்றுகள், கையிற் கனியாய் இருக்கப் புண்படுவானேன் எனச் சான்றுகளைத் திரட்டி வைத்தார்.

தொடக்கத்தில் கழகப் பங்கு சேர்ப்பதே கழகப் பணிகளில் தலையாய பணி. அப் பணியே தலைமைக் கழகத்தில் இருந்த