உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அமைச்சர்கள் இருவர்தம் பணியாக இருந்தது. அப் பணியை நிறைவேற்றுதலில் தம் பங்கு எவ்வளவு என்பதை வெளிப்படுத் தினாலே போதுமே! அதனைப் பட்டியலிட்டு அறிக்கையால் வெளிப்படுத்தினார். நிறைவேற்றற் கழகத்தாரும் சரிபார்த்து ஒப்புதல் வழங்கினர். பங்குகள் சேர்த்த வகை,

1. திரு. மா. திரவியம் பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள்

124

2. திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள்

3216

3. திரு. மா. தி. அவர்களும் திரு. வ. தி. அவர்களும் சேர்ந்து சேர்த்த பங்குகள்

1120

4. திரு. தி. மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள் தனியாய்ச் சேர்த்த பங்குகள்

5. திரு. தி. கணபதியப்ப பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள்

15

1

ஆகப் பங்குகள் : 4475

இப்பட்டியலில் இருந்தே திருவரங்கர் செய்த கழகப் பணி எத்தகையது என்பது வெளிப்படுமே! இதன் பின்னர்ச் சிக்கல் குறைந்தது. நிறைவேற்றற் கூட்டத்தார் முடிவுப்படி திருவரங்கர் ஒருவரே அமைச்சராக இருக்கும் நிலைமை உண்டாயிற்று. அதன் பின்னர் உன்னிப்பாகக் கழகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.

காற்றுப் புகாத நட்பும் காசு புகக் கெடும்' என்பது வழக்கு மொழி. 'மயிர் ஊடாடா நட்பும் பொருள் ஊடாடக் கெடும்’ என்பதும் அது. கொழும்பிலேயே கொழுமையான நண்பராகத் திகழ்ந்தவர் குலசைச் செந்தில் ஆறுமுகனார். அவரே திருவரங்கர் நீலாம்பிகையார் திருமணத்திற்கு எழுவாயும் பயனிலையுமாய் இருந்து நடத்தி வைத்தவர். அவர் கருத்தும் திரிந்தது! தீயூழ் அல்லது போகூழ் புகுந்துவிட்டால், எண்ணிப் பார்க்க இயலாத நிகழ்ச்சியும் நடக்கும் போலும்!

1937-38ஆம் ஆண்டுக் கணக்கை முடிப்பதற்காகச் சென்னை முகவர் திரு. வ. சு. நெல்லைக்கு வந்திருந்தார். திருவரங்கர்

.