உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

93

நெல்லைக் கணக்குகளை ஒழுங்குறுத்திக் கொண்டிருந்தார். செந்திலாறுமுகனார்

அவ்விருவரிடையேயும்

பேசினார். திருவரங்கரைப் பார்த்து, “நீங்கள் அமைச்சர் பொறுப்பில் ருந்து விலகிக் கொள்ளவேண்டும். நாங்கள் தக்க ஒருவரைத் தேர்ந்து கழகத்தை நடத்திக்கொள்வோம்” என்றார். ஆறுமுகர் உரை அரங்கர் எதிர் பாராதது! திடுமென்று இப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியுமா திருவரங்கர்?

ம்

“பங்காளிகள் கூட்டம் தீர்மானித்தபடி என் பதவிக் காலம் நிறைவுற இன்னும் 71/2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் நான் பதவி விலக வேண்டிய கட்டாயம் என்ன? வளர்ந்து வரும் கழகத்திற்கு என்னால் நேர்ந்த கேடென்க? நான் என் பதவிக் காலம் முடியும் அளவும் விலகப் போவதில்லை” ல்லை” என்று மறுத்தார்.

செந்திலாறுமுகனார் சினந்தார். அவர்கள் இயல்பாய் அமையாத அப் பான்மையை அவர் கொண்டிருந்தது அரங்கருக்கும், வ.சு.வுக்கும் வியப்பும் திகைப்பும் ஆயின கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் போலும்! வயப்படுத்தாளர் வழிப்பட்ட இவர் இதுவும் உரைப்பார்; எதுவும் உரைப்பார் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதிலே, "நெல்லையப்பர் திருக்கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளிலும் சுற்றி வரும்போது, காதைப் பொத்திக்கொண்டு போக வேண்டியுள்ளது. அண்ணனும் தம்பியும் கூடிக் காள்ளையடிக்கிறார்கள் என்று பேசுவதைக் கேட்டு

முடியவில்லை!” என்றார்.

அரங்கர்க்கு ஆறாத்துயராக இருந்தது. தனிப்பட்ட தம்மைக் குறித்த பழிச்சொல்லுக்காக வருந்தித், தம் உயிரினும் மேலாகக் கருதி வளர்த்துவரும் கழகத்தைப் பொறுப்பில்லாதவ ர்களிடத்தே விட்டுப் போக்கடித்து விடுவது பொல்லாதது. எப்படியும் கட்டிக் காப்பதே கட மை என்று தமக்குள் திட்டப்படுத்திக்

கொண்டார். “கழகப் பங்காளிகள் தேர்ந்தெடுத்துக் கட்டளையிட்டுள்ள காலம் வரை கழகத்தைக் காப்பதே என் கடன்; அதற்குமுன் உங்கள் வசைமொழிக்காக விலகப்போவதில்லை” என்று உறுதியாகச் சொன்னார்.

ஆறுமுகர் உள்ளம் படபடத்தது. அவர் முன்னரே கலந்து பேசிக்கொண்டிருந்தபடி, நீங்கள் பதவியில் இருந்து விலகவில்லையானால் நாங்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறோம்' என்று கூறிப் பதவி விலகல் கடிதத்தை