உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

முன் வைத்தார். அவர் பதவி விலகல் மட்டுமோ? ஒரே வேளையில் (1-5-1938இல்) தலைவரொடும் சேர்ந்து எட்டுப் பேர்கள் மொத்தமாகப் பதவி விலகினர். மொத்த ஆட்சிக் குழுவினரே பதின்மர்! அவருள் எண்மர் பதவி விலகிவிட்டனர். ஒரோ ஒருவர் மட்டும் பதவி விலகல் தரவில்லை. அவர் அக் கூட்டத்திற்கு வரவில்லை. அவரே, ‘திருசங்கர் கம்பெனி' என்னும் அமைப்பில் அரங்கருடன் இணைப்பங்காளராக இருந்த திரு. சங்கர நாராயண பிள்ளை என்பார்.

L

“வந்து விட்டதோர் இடையூறு” என்று திருவிளையாடல் மொழிவது போலப், பேரிடையூறு கழக நிறுவனத்திற்குச் சூழ்ந்தது. அரங்கர் என்ன செய்வார்? நேரே சங்கர நாராயணரைச் சார்ந்தார்! அவரை அழைத்துக்கொண்டு, நாகர்கோயிலுக்குச் சென்று கழகப் பங்காளருள் ஒருவரும், கழக வளர்ச்சியில் பேரார்வம் கொண்டவரும், உண்மையை உள்ளவாறு அறிந்தவருமாகிய வழக்கறிஞர் ப. சிதம்பரம் பிள்ளையைக் கண்டு கலந்துரையாடினார். அவர் கழக விதிகளை நன்கனம் ஆய்ந்து, இருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் இருவரும், இருவரை இணைத்துக்கொள்ள விதியில் இடமிருப் பதைச் சுட்டிக் காட்டி நிலைபெறுத்தினார். கழகத்திற்கு நேரும் இக்கட்டுகளை நிமிர்ந்து நின்று விலக்கிக் காத்தற்குத் துணிவும் உண்மையும் ஒருங்கு கொண்ட ப. சிதம்பரம் பிள்ளை தலைமைப் பொறுப்பில் இருத்தல் நலமென அரங்கரும் வ. சு.வும் கருதினர். சிதம்பரரும் இசைந்தார். அவருடன் திரு. தி. சி. இராமலிங்கம் திரு.தி.சி. பிள்ளை என்பாரும் ஆட்சிக் குழுவில் இணைத்துக் கொள்ளப் பெற்றார். அதற்குப் பின்னர் நால்வரும் மற்றும் நால்வரைத் தெரிந்தெடுக்கும் உரிமை வாய்ப்பதால் எண்மர் ஆட்சிக் குழுவினர் ஆயினர்.

கழகத் தலைவராய் அமைந்த சிதம்பரர் ஒரு கருத்தினைக் கழகத்தில் வைத்தார். “நெல்லையைச் சார்ந்தவராகவே கழகத்தில் வைத்தார். “நெல்லையைச் சார்ந்தவராகவே கழக ஆட்சிக் குழுவினர் இருந்தால் இப்பொழுது ஏற்பட்ட இடையூறு பின்னும் பல்கால் ஏற்படக் கூடும். அதனைத் தவிர்ப்பதற்காக, நெல்லையை மட்டும் மையமாக்காமல் நெல்லையோடு, நாகர்கோயில், செட்டிநாடு என்னும் முப்பகுதிகளையும் தேர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் மும்மூன்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கும் புதுமுறையை மேற் கொண்டால் ஒட்டு மொத்தமாகக் கழகத்தின் செயன்மையை முடக்க நினைவார்