உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

95

எண்ணம் நிறைவேறாமல் போகும். அவ்வாறே இனிச்செய்வோம்” என்று அம் மரபை நிலைப்படுத்தினார். அம் முறை கழகத்தின் விரிவுக்கு மெய்யாகவே உதவியாய் அமைந்தது.

இதனால், பின்னே இத்தகைய இடையூறு கிளைக்கவில்லை என்று பொருளில்லை. அரங்கர் காலத்திற்குப் பின்னர்த் திரு.வி. சங்கரநாராயண பிள்ளையும் கருத்து மாறுபட்டார்; கடுத்து நின்று செயலாற்ற முனைந்தார். அவர்மேல் நடவடிக்கை மேற்கொண்டு 1953இல் அவரைப் பதவி விலக்கம் செய்யும் அளவும் நேர்ந்தது! காய்த்த மரத்திலே கல்லெறி என்பதுபோல் எத்தனை தாக்குதல்கள் கழகத்திற்கு, இவற்றையெல்லாம் வென்றமையே 'கழகத்திற்கு இணையான நூல் வெளியீட்ட மப்பு ஒன்று இல்லை என்னும் தனியுயர் பெருமை பெருகிக்கொண்டே வரும் பேற்றை நல்கியதாம்.

“வெள்ளைத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்”

66

'அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்”

6

வை, வள்ளுவர் வழங்கும் இடுக்கண் அழியாமைத் திருப் பாடல்கள்.