உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

85

துணைவியார் அல்லரோ அவர்! ஆகலின், மணம்புரிந்து இல்லறம் புக்க காலை முதலே எழுத்துப் பணியில் அழுத்தமாக ஊன்றினார். ஆராய்ச்சி புரிதலில் பொழுதெல்லாம் செல விட்டார்! அவர் எழுத்தில் சுரந்த முதல் படைப்பு எது? சொல்லவும் வேண்டுமோ? வடசொல் நீக்கத்திற்கும் வண்டமிழ் ஆக்கத்திற்கும் கருவியாக அமைந்த ‘வடசொற்றமிழகராதி’ யைத் தொடராக வெளியிட்டார். 1927ஆம் ஆண்டு நவம்பர்ச் செந்தமிழ்ச் செல்வி இதழில் (சிலம்பு 5; பரல் 10; பக். 631) இத் தொடர் கட்டுரைக்கு ஒரு முன்னுரை வரைந்து வெளியிட்டார்: ‘எழுநூறு ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சியாலும், அவர் தம்மைப் பின்பற்றிய போலித் தமிழர்களிற் பெரும்பாலார் முயற்சியாலும் பலப்பல வடசொற்கள் நந்தமிழிற் கலந்துவிட்டன. இங்ஙனந் தமிழின்கண் பல வடசொற்கள் வந்து புகுந்துபின் பழந்தமிழ்ச் சொற்களிற் பல வழங்காதொழிந்தன. தமிழிற் கலந்து அது தன்னை முற்றும் வேறுபடுத்தும் ஆரியமொழிச் சொற்களை இப்போதே நாம் தடை செய்யாவிடின் தமிழ் தன்னிலை கெட்டு வேறுமொழி போலாகும் என்பதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. வேறு நாடுகளிற் குடியேறி நாகரிகமில்லாத தமிழ்மக்கள் தம் தமிழ்மொழியினைப் பாதுகாவாமல் திரித்து வழங்கியதோடு, வடமொழிச் சொற்களும் கலக்க இடந்தந்தமையினாலேதான் தமிழ்மொழி ஒன்றே தன்னிலை திரிந்து ‘மலையாளம்', 'கன்னடம்’, ‘தெலுங்கு' முதலான பல்வேறு மொழிகளாயிற்று.

புகுத்தப்பட்டுப்

தமிழின்கண் வடமொழிச் சொற்கள் நிரம்பவும் விரவினமையால் இவைதாம் வடசொற்கள் இவைதாம் தமிழ்ச் சொற்கள் எனத் தமிழ்மக்களிற் பெரும்பாலார் அறியக்கூடாத வாறு அவை தலைமயங்கிக் கிடக்கின்றன. இக்காலத்துத் தமிழ்மக்களிற் பருந் தாகையினர் ஆரிய மொழிச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் பகுத்துணரும் கல்வி இலராகித் தாமெழுதுங் கட்டுரைகளிலும் நூல்களிலும் வடசொற்களைச் சேர்த்தெழுதுவதோடு அவைகளைத் தமிழ்ச் சொற்களாகவே பிழைபடக் கருதி அவை தம்மை மிகவும் சேர்த்தெழுதித் தமிழின் தூய்மையையும் இனிமையையும் பழைமையையும் கெடுத்து வருகின்றார்கள். வடசொற்கள் இவை தமிழ்ச் சொற்கள் இவை என நந்தமிழ்மக்கள் எளிதில் உணர்ந்து வடசொற்களை நீக்கித் தூய தனித்தமிழில் எழுதி நந்தமிழை நிலை திரியாமல் பாதுகாக்கும் பொருட்டு உலக வாழக்கிலும்