உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

ஆருயிர் இருந்தார்! அவருக்காக இருந்தார்! ஆதலால், அம்மையார் படித்தலையும் ஆராய்தலையும் எழுதுதலையும் கைவிட்டார் அல்லர். அறிஞர் அவையம் சென்றோ, இறைவன் திருக்கோயில் சென்றோ, மங்கையர் மன்றம் சென்றோ உரை யாற்றத் தவறவில்லை! மொழிக்கு ஆக்கந் தரும் பணியாற்று தலில் முட்டுற்று நின்றதில்லை! தனித் தமிழ் இயக்கத்தைத் தூண்டி வளர்த்த அத் திருமகளார் 1920இல், 'தனித் தமிழ் இயக்கம்' குறித்துக் கட்டுரைகள் வரைந்தார். செய்தித் தாளுக்கு விடுத்தார். கிழமை இதழ், திங்களிதழ் ஆகியவற்றுக்கும் செய்தி விடுத்தார். என்ன விளைந்தது?

தனித்தமிழ்க்

கட்டுரைகளை

மறுத்து, மறுப்புக் கட்டுரைகள் வெளிப்பட்டன; வினாக்கள் கிளர்ந்தன; 'தனித் தமிழிலே ஒரு நூலேனும் உண்டோ?' ‘தனித் தமிழில் எழுதவும் கூடுமோ?' 'தனித் தமிழ் என ஒரு தமிழ்தானும் உண்டோ?’ என்றெல்லாம் வினாக்கணை தொடுத்தனர். எவர்? பொது மக்களா? புலமை மக்கள் என்பாரும் அறிவுத் துறையையே தம் கையில் வைத்திருந்த அறிஞர் பெருமக்கள் என்பாரும்! பிறர் நிலை பேசவும் வேண்டுமோ? 'தனித் தமிழ்' என்றபோது 'தனித்து அமிழ்' என்று தவத்திரு அடிகளாரையே பழித்த பழிப்பிறப்புகள் தோன்றிய நாடாயிற்றே! இம் மெல்லியற் செல்வியின் கருத்தைத் தானோ மறுக்கத் தயங்குவர்?

வாளா

அம்மையார் என்ன செய்தார்? மறுமொழி யுரைத்தார்! தனித்து இயக்க வல்லது தமிழ்மொழி என்பதை சொல்வேன் அல்லன்; வாங்கிப் படித்துப் பாருங்கள்; தனித் தமிழ் அல்லாச் சொல் ஒன்றைக் குறித்துக் கூறுங்கள்; என்று செயலால் நிறுவிக் காட்டுவார் போலத் 'தனித்தமிழ்க் கட்டுரைகள்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

பதின்மூன்று கட்டுரைகளைக் கொண்ட அந் நூல் 1925இல் வெளிப்பட்டது. வெளிப்பட்ட பயன் ‘தனித் தமிழ் இயங்க முடியும்; அதில் நூலும் எழுதலாம்' என்னும் உறுதியை உண்டாக்கிற்று. தமிழ்ப் பற்றாளர் மகிழ்ந்தனர்; தனித் தமிழ் நெறியைப் பற்றிக்கொண்டனர்; தனித் தமிழ் ஓர் இயக்கமாகச் செழித்து வளரலாயிற்று.

தனித் தமிழ்க் கட்டுரைகளைத் தந்தையாருடன் மகளாக இருந்த காலத்தே வரைந்த அம்மையார், அரங்கருடன் வாழ்ந்த காலத்துப் பத்து நூல்களைப் படைத்தார். அழுந்திப்போன பழக்கத்தால் அரங்கர் மறைவுக்குப் பின்னரும் இரண்டு