உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் நுதல்வு

கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. இளங்குமரன் தலைமைத் தமிழாசிரியர் மு. மு. உ . பள்ளி, மதுரை

கழக ஆட்சியர் தாமரைச் செல்வர் வ.சு. அவர்களின் மணிவிழா 1957 இல் நிகழ்ந்தது. அப்பொழுது கழகப் புலவர் திருமிகு ப. இராமநாத பிள்ளை அவர்கள், கழக ஆட்சியர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் வரைந்தார். பின்னர் வ.சு. அவர்களின் 75 ஆம் ஆண்டை நிறைவு குறித்த பவள விழா 1973 இல் நிகழ்ந்தது. அப்பொழுது வெளியிடப்பெற்ற பவளவிழா மலரில் அவர்கள் வரலாற்றைச் சற்றே விரித்து யான் எழுதினேன். பின்னர்க், கழக மணிவிழா 1982 சனவரியில் நிகழ்ந்தது. அது போழ்து அவ் வரலாற்றை மேலும் யான் விரித்தெழுதினேன். அது, 350 பக்க அளவில், அருமை வாய்ந்த படங்களுடன் வெளிப்பட்டது. ஆகலின், வ.சு. அவர்களின் வரலாறு ‘தொகை, வகை, விரி' என்னும் நூல் வகை மூன்றையும் ஒருங்கே கொள்வ தாய் அமைந்தது. 'விரியின் விரியும் வேண்டும்' என்னும் விழுமிய விழைவுடைய பெருமக்களும் உளர் என்பதை நினைக்க இனிமை மேலும் எழுகின்றது.

66

வ.சு. அவர்களின் வரலாறு வெளியீட்டுக்கு அணியஞ் செய்யுங்கால் அவர்கள் உள்ளத்தில் ஓர் உறுத்துதல் எழுந்தது. ‘தமியேன் வரலாற்று நூலைக் கழக மணிவிழாவில் வெளியிடுவது பற்றி என் நினைவுக்கு நேற்று வந்தபோது என் அருமைத் தமையனார் அவர்களின் சிறப்பு மிக்க வரலாற்று நூலையன்றோ முதற்கண் எழுதச் செய்து வெளியிடுதல் வேண்டும்; பின்னரே எனது வரலாற்று நூலை வெளியிடுவது பொருத்தமாயிருக்கும் என்ற எண்ணம் என் மனத் தகத்தே தோன்றி வருத்துகின்றது” என்று வருந்தி எழுதினர் (8-12-81).

அதுகால் என்

இடக்கண்ணின் கருமணியை ஒட்டி வளர்ந்திருந்த வெண்படலத் தசையை அறுவை மருத்துவம்