உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

11

செய்திருந்தேன். அதனால், “தங்களுக்கு அறுவை மருத்துவம் செய்யப் பெற்ற கண் செவ்விதாக வேண்டுமே! என் செய்வது! என் மனத்தில் ஏற்பட்ட உணர்ச்சியை உண்மை அன்புள்ள தங்கட்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இப்பொழுது எழுத முடியாவிடினும் எனது கருத்தைத் தங்களுக்குத் தெரிவிக்கக் மைப்பட்டுள்ளேன். அதற்குத் தாங்கள் கவலை கொள்ள வேண்டா” என்று குறித்தனர்.

கட

7

16-12-81 இல் “என் அருமை அண்ணா அவர்கள் கழகம் தொடங்கியது முதல் அவர்கள் வாழ்ந்த காலம் வரையுள்ள குறிப்புக்கள் செல்வி தொடங்கியது முதல் 1944 வரை வெளிவந்த சிலம்புகளில் காணலாம். மெய்கண்ட சாத்திர மாநாட்டை 7 நாள்கள் 1941 இல் நடத்தினார்கள். அதுவே அவர்கள் உடலுக்குப் பேரூறாக ஏற்பட்டது. திருக்குற்றாலச் சாரல் மாநாடு மூன்றோ நான்கோ நடத்தினார். நெல்லையில் சைவப் பெரியர் மாநாடு சிறப்பாக நடைபெற்றதோடு, தென்னிந்திய சித்தாந்த சங்கத்தின் சார்பில் சைவ மாநாடுகள் நடைபெற்றன” என்றும் இன்னவாறு பல குறிப்புகளைச் சுட்டினர்.

ப்

பெருமகனார் வ.சு. அவர்களின் ஆர்வத்தையும் கடப் பாட்டுணர்வையும் எண்ணி மகிழ்ந்த யான் யான் திருவரங்கர் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கலானேன். இவ் வரலாற்றுக்குக் கிடைத்த கருவிகள் பலப்பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஏழு. அவை :

1. செந்தமிழ்ச் சிலம்புகள்.

செல்வியின்

முதல்

இருபத்தொரு

2. பேரா. திருமிகு மறை. திருநாவுக்கரசு அவர்கள் திருவரங்கரும் நீலாம்பிகையாரும் இயற்கை எய்திய காலையில் வரைந்த வரலாற்றுச் சுரக்க நூல்களும், தவத்திரு. மறைமலையடிகளார் வரலாற்றுப் பெரு நூலும்.

3. பெருந்திருவாட்டி சுந்தரத் தம்மையார் பிரிவு குறித்துச் சந்தமிழ்ச் செல்வி சிலம்பு 27 இல் இதழாசிரியர் வரைந்த வரலாற்றுக் குறிப்புகள்.

4. மறைமலையடிகள்

திருவரங்கருக்கு வரைந்த கடிதங்களும், திருவரங்கரும் நீலாம்பிகையாரும் வ. சு. அவர்களுக்கும் பிறர்க்கும் வரைந்த கடிதங்களும்.