உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

5. கழகம் வெளியிட்ட பல்வேறு மலர்களிலும் தமிழ்ச் சான்றோர்கள் வரைந்த குறிப்புகள்.

6. வ.சு. அவர்கள் அவ்வப்போது வரைந்துள்ள குறிப்பு களும், நேரிலும் விழாக்களிலும் நெக்குருகி நின்று உரைத்த உரைகளும்.

7. கழகம் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகளும் செய்திக் குறிப்புகளும்.

இக் கருவிகளையும் பிறவற்றையும் வழங்கிய பெருமக்களுக்கு வ் வரலாற்று நூல் ஆசிரியன் என்னும் நிலையில் நன்றி கூறும் கடப்பாடுடையேன்.

இவ் வரலாற்றுக் கைப்படி நிலையில் படித்தும் படிக்கக் கேட்டும் உருகிய பெருமக்கள் இருவர். அவர்கள் வ. சு. அவர் களும் மறை. திருநாவுக்கரசு அவர்களும் ஆவர். அரங்கரொடு முன்னவரும் அம்பிகையாரொடு பின்னவரும் உடன் பிறப்புரிமை உடையர் அல்லரோ! ஆகலின் இவர்கள் “உடன் பிறந்து உடன் வளர்ந்து, நீருடனாடிச் சீருடன் பெருகி ஓலுடனாட்டப் பாலுடனுண்டு, பல்லுடனெழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையவர்” என்று இறையனார் களவியல் உரைகாரர் நிரல் பெறவுரைக்கும் உரைத்திற உண்மையை மெய்ப்பித்து என்னையும் உருக்கினர்.

அமைச்சர் அரங்கர் வள்ளுவர் வகுத்த அமைச்சர் திறங்களெல்லாம் ஒருங்கே அமைந்தவர். அமைச்சருக்கு வள்ளுவர் வகுக்கும் திறங்கள் இருபதாம். அவை : செயலுக்குரிய கருவி செய்தற்காம் காலம், செய்யும் வகை, செய்யும் அருஞ்செயல் அஞ்சாமை, நற்குடிப் பிறப்பு, காக்கும் திறன், கற்றறிந்த அறிவு, அயரா முயற்சி, வேண்டாரைப் பிரித்தல், வேண்டுவாரை இணைத்தல், பிரிந்து வந்தாரைப் பிணைத்தல், ஆய்ந்து தெரிதல், தேர்ந்து செய்தல், ஒரு தலையாகத் துணிதல், அறன் அறிதல், ஆன்றமைந்த சொல்லல், திறங்கண்டறிதல், நூலறிவு, நுண்ணறிவு என்பன இவ்விருபதும் திருவரங்கருக்குப் பெருவரங்களாக வாய்த்தவை என்பதை இவ் வரலாற்றைக் கற்பார் எளிதில் அறிந்து கொள்வர்.

ஒரு வரலாறு சுருங்கியதா? விரிந்ததா? இவற்றைக் கருதுவது முதன்மையன்றாம். வரலாற்றின் நோக்கம் நிறை