உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புகழொடு தோன்றிய கழகம்

"தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பது பொய்யா மொழி. மனிதத் தோற்றத்திற்குரித்தாய் அமைந்த இம் மொழி, ஓர் அமைப்பின் தோற்றத்திற்கும் உரிமை பூண்டதேயாம் புகழொடு தோன்றிய புலமை மைந்தர் பேரார்வத்தால் புகழொடு தோன்றிய புலமைத் திருவினர் துணையால் தோன்றியது தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகும்.

கழகத்திற்கு இதுபோழ்து (1980) மணிவிழா. அது தோன்றிய ஆண்டு 1920. அறுபான் ஆண்டுகளின் முன்னே தோன்றிய கழகம் ஆற்றியுள்ள பணிகள் பொன்னெழுத்துகளில் பொறிக்கத் தக்க பெருமை உடையதாம். அதனை ஆய்தற்கு ஒரு நெறி முறையை வகுத்துத் திறனுறத் தந்துள்ளனர், தேர்ச்சிமிக்க திருவாளர்கள். அம் முறை எதிர்மறை முறையாம்!

66

திரு.

பிள்ளையர்களைக்

வ.

காணும்போதெல்லாம், நினைக்கும் போதெல்லாம் அவர்களது அசைக்கலாகாத அன்னை மொழிப் பற்றும் தணிக்கலாகாத தனித்தமிழ் ஆர்வமும் என் நெஞ்சத்தை ஈர்த்து இன்புறுத்தும். 'தமிழ்த்தாய் சய்த தவப்பயனாய் அவர்கள் தமையனார் திரு. திருவரங்கம் பிள்ளையவர்களும் திரு. பிள்ளையவர்களும் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்திராமல் இருந்தால், தோற்றுவித்தும் ஓயாது முனைந்து இன்றுள்ள அரும்பெரு நிலைக்குக் கழகம் உயருமாறு உழைத்திராமல் இருந்தால், இத்தனை இலக்கிய இலக்கண அறிவு சால் நூல்களை இவ்வளவு திருத்தமான முறையில் இத்துணை அழகழகான வடிவங்களில் தமிழுலகம் எங்ஙனம் பெற்றுப் பயனடைய இயன்றிருக்கும்' என கல்லூரி, குமரகுருபரர் குழைந்தைப்பள்ளி, நீலாம்பிகையார் பல்துறைப் பயிற்சிப் பள்ளி, கா.சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றம் இன்னபல அறப்பணி அமைப்புகளை நிறுவிப் பேணி வளர்த்தலால், இத் தமிழ் கூறு நல்லுலகம் பெற்றுவரும் நலங்களைச் சொல்லவும் கூடுமோ?