உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு நிறுவனத்திற்கு

15

எடுத்துக்காட்டா,

சீரிய கூட்டுறவு சவ்விய இதழுக்கு எடுத்துக்காட்டா, குறைவிலா நிறைவாம் பதிப்புக்கு எடுத்துக்காட்டா, புத்தகக் கட்டட எழிலுக்கு எடுத்துக்காட்டா, வீட்டு நூலக வைப்புக்கு எடுத்துக்காட்டா, தொகுப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டா - கழகம் என்னும் ஒரே விடை டைதானே இவற்றுக்கு உண்டு!

தனித்தமிழ் மலையாம் மறைமலையார் தொண்டு விளக்கமுற, மொழிஞாயிறு பாவாணர் தம் செந்தமிழ்ச் சொற்பிறப் பாக்கப்பணி துலக்கமுற, பேரறிஞர் மு வ வின் திருக்குறளுரை வீடெல்லாம் ஒளிசெய்ய வாய்த்த பணிக்கௗரி கழகமே யன்றோ!

இக் கழகம் தோன்றிற் றில்லையேல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்னும் முழக்கம் எழுந்திருக்குமோ? உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் தமிழ்ச் சங்கமும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இன்னபிற பேரமைப்பு களும் தோன்றுதற்கு வழிவகுத்துத் தந்த வளமனை கழகம் என்பதை எண்ணாதிருக்க இயலுமா?

கழகந் தோன்றியதால் தோன்றிய பயன்கள் இவையெனின், அக் கழகத்தின் நிறுவனர் அதன் அமைச்சர், கழகந் தோன்றிய நாள் தொட்டு இந்நாள்வரை அதன் ஒவ்வொரு செயல் திறத்திலும் ஒன்றி உடனாகி இயக்கிவரும் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளையின் உடன்பிறப்பாய், வழிகாட்டியாய், குருவாய் அமைந்தவர் ஆகிய திருவரங்கனார் தோன்றிய பயனே மூலமும், முளைவும் விளைவுமாய் அமைந்தன என்பது வெளிப்படை. ஆகலின் அவர்தம் வரலாற்றை அறிதல், தமிழக மறுமலர்ச்சி வரலாற்றை அறிதலாம் என்னும் குறிப்புடன் அறிவோம்.