உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

2. தெய்வத் திருவடிவம்

'கற்சிலை எனத் தகுந்த கட்டுடல்; சற்று வழுக்கையுடன் கூடிய கனத்த பெரிய தலை; நீறுவிளங்கும் பரந்த நெற்றி; பெரிய கண்கள்; இனிக்க இனிக்கப் பேசும் குறுநகை முகம்; அகன்ற மார்பு, வெள்ளிய உட்சட்டை; சட்டைப்பைகள் யாவற்றிலும் பல வகையான கடிதக் கட்டுகளுடைய பொத்தான் போடாத மேற்சட்டை; இடுப்பிற் சுற்றியுள்ள செம்பட்டு; கணுக்காலுக்கு மேற்பட்ட வெள்ளை வேட்டி; ஐந்தடி உயரமுள்ள சற்றுக் குறைந்த உயரம்; நிமிர்ந்து எதிர்நோக்கி நடக்கும் வீரநடை இவை, தமிழ்த் திருவரங்கரின் தோற்றமென அவர்தம் மைத்துனர் மறை கண்டது கண்டவாறு உரைக்கும் கவினுரை.

திருநாவுக்கரசு

وو

தோற்றத்தால் சிறந்து விளங்கிய திருவரங்கர், தமக்குத் தமையனாராக அமைந்து வழிகாட்டிய ஏற்றத்தைத், தாமரைச் செல்வர் வ. சு. தம் பவள விழாவில் நினைவு கூர்ந்தார் :

என்

“என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டவர் தமையனார் அவர்களே. அவர்கள் பழைய இதழ்களைத் தொகுத்துக் கொண்டே இருப்பார்கள். பழைய நூல்களைத் தேடித் தொகுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியெல்லாம் அவர்கள் எனக்கு வழிகாட்டியதைப் பின்பற்றித்தான் நான் அப்படியே செய்துவருகிறேன். மறைமலையடிகள் தொடர்பினாலே இந்தத் தனித்தமிழ்த் தொண்டு செய்யும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. ஆதலால், எனக்கு கிடைக்கப்பெறும் புகழுக்கும் பெருமைக்கும் உரியவர்கள் என் அருமைத் தமையனார் திருவரங்கனார் அவர்களும், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடி களாருமே ஆவர்” (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 47, பக்கம் 744) என்பது தம் தமையனாரை நினைவுகூர்ந்த தம்பியார் உரை.

66

இந்திய வரலாறு தென்னகத்தில் தொடங்கியே எழுதப் பெறவேண்டும்” என்பது ஆராய்ச்சியாளர்களின் முந்தை முடிவு. ன்றை அறிஞர்களோ, “உலக வரலாறே தென்னகத்தில்

-