உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

17

இருந்து தொடங்கியே எழுதப்பெற வேண்டும் ம்" என்பதை வலியுறுத்துகின்றனர். 'உலக முதல் தாய்மொழி, தமிழே' என்பதையும், 'மாந்தன் முதற்கண் தோன்றிய இடம், குமரிக் கண்டமே' என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். இத்தகு புகழ்வாய்ந்தது தென்னகம்.

தென்னகத்திலும் தெற்கே செல்லச் செல்லத் தமிழின் சீர்மை சிறந்து விளங்குதல் கண்கூடு. இன்றும் பழந்தமிழ் வழக்காறுகள் பழுதுபட்டுவிடாமல் போற்றிக் காக்கும் வளமையோடு இலங்குவது பழம்புகழ்ப் பாண்டிநாடேயாம். பாண்டி நாட்டின் சிறப்பாக, முப்பொருள்கள் ஓதப்பெறு கின்றன. அவை முத்து, தென்றல், தமிழ் என்பன.

L

66

திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதிமுனிவர் றைவன் தற்கு நோக்கி நடம்புரிவது ஏன்?" என ஒரு வினாவை எழுப்பிக் கொண்டு, விடையிறுக்கிறார்: “இறைவன் தன் ஆடலால் விளையும் இளைப்பைத் தென்றற் காற்று தன் முகத்தில் விசிறுதலால் நீக்கிக்கொள்வதற்கும், திருச்செவியால் தென்னன் தமிழமிழ்தம் பருகிக் களையாறுதற்கும் தெற்குநோக்கி நடம்புரிகின்றானாம்!" இத்தகு தென்னாட்டின் நன்னாடாம் திருநெல்வேலி சார்ந்த பாளையங்கோட்டையில் பிறந்தார் திருவரங்கனார்.

66

பாளையங்கோட்டையில் முத்துசாமிப்பிள்ளை என்பார் பேரும் பெருமையும் விளங்கத் திகழ்ந்தார். அவர்தம் அருமைத் திருமகனார் வயிரமுத்துப்பிள்ளை. பெற்றோர் தம் மக்களைக் கண்ணே மணியே வயிரமே முத்தே” என்று பாராட்டுவது வழக்கம். பாளை முத்தோ, தம் தம் மக மகனை ன வயிரமுத்தாகப் பெயரிட்டுச் சீரோடும் சிறப்போடும் வளர்த்தார். அக்கால முறைப்படி உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பித்துத் தம் மரபுத் தொழிலில் பயிற்றினார். இந்நிலையில் உரிய திருமண பருவம் சார்ந்தார் வயிரமுத்து.

பாடு புகழ் பெற்ற கொற்கைப் பழநகரில் ஐயன்பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர்தம் அருமைத் துணைவியார் பேச்சியம்மையார். இவர்கள் செல்வக் குழந்தையாக 1868இல் ஓர் அருமை மகவு பிறந்தது. அம் மகவின் புற அழகும் அக அழகும் கருதி வைத்தாற் போலச் சுந்தரத்தம்மை எனப் பெயர்சூட்டி வளர்த்தனர்! பெயர் விளங்கவந்த அவ்வழகம்மை, அழகுருவாம் மணப்பருவம் சார்ந்தார். அவரே வயிரமுத்தான் அழகுக்கு அழகு செய்யும் வாழ்க்கைத் துணையாக அமைந்தார்.