உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

வயிர முத்தொடு அழகுசார்ந்த அருமை, இயற்கையொடு பொருந்திய இனிமை வாய்ந்ததேயாம். அவ்வாண்டு 1884.

-

-

வயிரமுத்து சுந்தரத்தம்மை இணைந்த இனிய வாழ்வு எத்தகையது! பொன்னும் மணியும் முத்தும் பவளமும் வயிரமும் ஒன்றுபட்டு எங்கும் அணிமாலை தணியா அழகினதன்றோ! அவ்வழகு செய்தது இவர்கள் வாழ்வு! குறிஞ்சிப் பூவில் தேனை எடுத்துச் சந்தன மரத்தில் சேர்த்து வைக்கப்பெற்ற தேனின் சுவைக்கும் நறுமணத்திற்கும் ஒப்புண்டோ? அப்படி ஒப்பறத் திகழ்ந்தது இவர்கள் வாழ்வு! இவர்கள் இனிய இல்வாழ்வின் பயனாகக் கிளர்ந்த மக்கள் ஐவர். அவர்கள் முத்துசாமி, திருவரங்கம், ஐயம்பெருமாள், சுப்பையா, குப்பம்மாள் என்பார். திருவரங்கர் 1890ஆம் ண்டு மேத்திங்களில் பிறந்தார்.

காதல் இருவர் கருத்து ஒருமித்து நடாத்திய இல்லறம், பதினைந்து ஆண்டுகள்கூட முற்ற முடிய நடந்தேறிற்றில்லை. அதற்குள் 1899இல் வயிரமுத்தர் இறையடி எய்தினார். சின்னஞ் சிறு மக்களைக் காண்ட முப்பது வயதே நிரம்பிய சுந்தரத்தம்மை என்ன பாடுபட்டிருப்பார்! பஞ்சுபடாப் பாடுபட்டு, மக்களை நோக்கி மனவுறுதியால் வாழ்ந்த அவர், தந்தையுமாகித் தம் கடன் ஆற்றினார். தாய்மையின் பெருமையே பெருமை! வெறுக்கத்தக்க வாழ்விலே, உருக்கம் தலைப்பட்டு விடுகிறது! குடும்பப் பெருக்கமே குறியாய்ப், பெண்மை பெருவாழ்வு வாழச் சூழ்கின்றது!

அருமைப்பாடேயாம்!

து படைப்பின்

இளமனைவிக்கும் இளமக்களுக்கும் தந்தையார் வைப்பு நிதி வைத்துச் சென்றாரா? நிலபுலன்கள் நிரம்ப விட்டுச் சென்றாரா? கன்றுகாலிகள் கணக்கிறந்து இருந்தனவா? இல்லை! இல்லை; வறுமையொன்றே வைப்புப் பொருளாய் விட்டுச் சென்றார்! வழி வழி வந்த வீடு ஒன்றுமே உடைமையாய் இருந்தது!

தொண்டாற் பழுத்த தமிழ்க் கிழவர் சுப்பையா பிள்ளை அவர்கள், தம் தந்தையாரைப்பற்றித் தம் அன்னையார் வழியாக அறிந்த செய்திகளை நினைவு கூர்ந்து சுட்டியுள்ளனர் :

“என் அருமைத் தந்தையார் அவர்கள் திருவுருவம் என் மனக் கண்ணில் தெளிவாகப் படவில்லை. அவர்கள் தோற்றம் பெரும்பான்மை என் அருமை அண்ணனார் வ. திருவரங்கனார்