உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

19

போல இருக்குமாம். திருமணம் ஆகும்போது அவர்கட்கு 27 அகவை இருக்கும் எனத் தெரிகின்றது. அப்போது என் அருமை அன்னையார்க்கு அகவை 16. அவர்கள் கட்டுத்திட்டமான உடல் அமைப்புடையவர்கள் என்றும் யாவரிடமும் அன்பாய்ப் பேசி நட்புக் கொள்ளும் தன்மை உடையவர்கள் என்றும், உறவினர் களிடமும் அன்பு காட்டி வருபவர்கள் என்றும் அவர்கள் விழி கவர்ச்சி தருவதாய் இருக்கும் என்றும் அன்னையார் தெரிவிப்ப துண்டு

"பல்வகைப் பொருள்கள் விற்கும் கடை (ஷாப்)யில் கணக்கு வேலைபார்த்து வந்தார்களாம். திருநெல்வேலிக்குச் சன்று ‘ப.த,' என்ற முகவரியிலுள்ள துலுக்கர் கடை கடையில் பொருள்களை வாங்குவதற்குச் செல்வார்களாம். அப்படிப் போய் வருகையில் ஒருநாள் 'ஐயா, வயிரமுத்துபிள்ளை! நீர் சொந்தமாக ஒரு கடை தொடங்கும். உமக்கு வேண்டிய பொருள் களைக் கடனாகத் தருகிறேன்' என்று சொல்லவே தனிக்கடை திறந்து நடத்தி வந்தார்களாம். அப்படி நடத்தி வரும்போது மொத்தமாக ஆமணக்கு முத்து, மண்ணெண் ணெய்த் தகரத் தூக்கு (டின்) ஆகியவை வாங்கி வீட்டில் வைத்தும், வியாழக்கிழமை தோறும் சந்தையில் வைத்தும் விற்க ஏற்பாடு செய்தார்களாம். இந்த முறையில் தொழில் வளர்ந்தோங்கி வருகையில் திடுமெனக் காய்ச்சலும் நெஞ்சு வலியும் ஏற்பட்டு மூன்று நாள் வரை துன்புற்று இறையடி சேர்ந்தார்களாம். அப்போது என் மூத்த தமையனார் முத்துசாமி பிள்ளைக்குக் கடையை நடத்துவதற்குப் பழக்கம் போதாது. சிறு பிள்ளைத் தனம். உறவினர் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே, மூன்று ஆண்டுகளில் கடையை நிறுத்தி அதிலுள்ள மிச்சப் பொருள்களை உறவினர் மளிகைக் கடை ஒன்றில் வைத்துவிட்டு அந்தக் கடையில் பணி ஏற்றுக்கொண்டார்."

“கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

என்றார் ஔவையார். அதனினும் கொடிது, இளங்கைம் மையாய்க், "குறுகுறு நடந்து சிறுகை நீட்டும்" ளமக்களைப் பேணிக் காக்கும் கொடு வறுமையாம்!

அக் கொடு வறுமையின் இடையே அன்றோ, ஆலின் அடிமரம் சாயவும் வீழ்து மரத்தைத் தாங்கிக் காப்பது போலச் சுந்தரத்தம்மையார் குடும்பத்தைக் காத்தார்! அவர் காத்த காவல் குடும்பக் காவல் ஒன்று மட்டுமா? அவன் அன்று காத்த காவலின்