உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

ஊட்டமும் திறமும் உழைப்பும் அல்லவோ, அருந்தமிழ் அன்னைக்குப் பன்னூறு அணிகலங்களைப் பூட்டிப் பூட்டிப் புகழுறுத்தும் நன்மக்கள் இருவரைத் தந்தது! அந்த வயிரமணிச் செல்வங்களை வயிற்றகத்துத் தாங்கி வளர்த்துத் தொண்டுக்கு ஆளாக்கித், தொண்டர் சீர் பரவுவார் போலத் தம் மக்கள் தொண்டிலே திளைத்து நின்ற தூய தெய்வத் தாய்மை வாழ்வு அதுவேயன்றோ! ஆகலின், இடும்பைக்கு இடும்பை தந்து, இன்மைக்கு இன்மை செய்து இணையற்று வாழ்ந்த அவ்வருமை அன்னையார் வாழ்வு உன்னுந்தோறும் உருக்கமும் அதே பொழுதில் உரமும் ஊட்டுவதாய்த் திகழ்கின்றதாம்!