உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழும் வழிகாட்டி

குடும்ப நிலை எப்படி? முப்பத்தோராண்டுக் கைம்மை நோன்புத் தாய்! பதின்மூன்றாண்டு முத்துசாமி! பத்தாண்டுத் திருவரங்கர்! ஏழாண்டு ஐயம் பெருமாள்! மூன்றாண்டுச் சுப்பையா! ஓராண்டும் நிரம்பாத குப்பம்மாள்! வருவாய்? ‘வரு வாய்' இருந்தால்தானே வருவாய் உண்டு? பொருள் வரும் வாயே அடைபட்டுவிட்டதே!

முத்துசாமி தந்தையார் வைத்துச்சென்ற கடையை மூடி உறவினர் கடையில் பணியில் அமர்ந்தார்! திருவரங்கர் கல்விக் காதல் தடையுற்றது. படிப்பை இரண்டாம் படிவத்துடன் முடித்து மூன்றாம் படிவம் செல்லும் அளவிலே படிப்பை விடுத்து வேலை தேடினார். அந்த இளம் பருவம் வேலைக் குரியதோ? கல்விக்குரிய வளமையான இளமை, வறுமையால் வேலைக்குத் தள்ளுண்டு சென்றது. வழக்கறிஞர் ஒருவரின் எழுத்தராக ஏவிற்று. அவ் ஏவுதல் விருப்பந்தரவில்லை. விரைவில் அதனை விடுத்து வேறு வேலைக்கு கிளப்பிற்று! வேலை கைக்குள்ளேயோ கிடைக்கிறது? பாளையங்கோட்டையை விடுத்து தூத்துக்குடிக்குச் சென்றார் இளைய அரங்கனார். துடிப்பும் துணிவும் கூடிவிடுமானால் இளமைக்கு ஈடு உண்டோ? 'சிற்றாள் வேலை எட்டாள் வேலை' என்னும் பழமொழி மெய்யென்பதை அறியார் எவர்?

கால்போன போக்கிலே போய்க்கொண்டிருந்தாலும் ஆகூழ்’ ஒன்று அமைந்துவிடும்போது கையில் கனப் பொருள் சிக்கிவிடும் போலும்! “குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே” என்னும் கோப்பெருஞ்சோழன் பொருண்மொழிக் காஞ்சி (புறம். 214) மெய்யாதற்குப் போலும், அரங்கனார் வேலை தேடித் தூத்துக்குடிக்குச் சென்றமை!

தூத்துக்குடியில் வழுதூர் அழகிய சுந்தரம் பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் சிவநெறிச் செல்வர்; செம்பொருள் துணிவினர்; தூத்துக்குடி சைவசித்தாந்த