உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

23

அப்பணிக்கு, அணி சேர்க்க அமைத்தார். ஊழையும் வெல்லும் உரம்; உயர்ந்த குறிக்கோள்; குடும்பத்தைக் காக்கும் புரவாண்மை; தம்மைச் சான்றோராக்கும் தகவு; தம்மைச் சார்ந்தாரால் தலைமையாகக் கொள்ளப்பெறும் பீடு; தமிழ்க் கல்வி ஊற்றம்; சமயச் சால்பும் சிக்கெனப் பிடிக்கும் கடைப்பிடியும்; நெஞ்சார்ந்த நேர்மை; வஞ்சமற்ற உழைப்பு; உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு; தேனென இனிய கூறித் திளைக்கும் நாநயம்; காலந் தவறாக் கருதுகோள்; சுற்றந் தழூஉம் உரிமைப்பாடு; தலைமையை மதித்தொழுகும் தனிப்பெருந் தகவு; புதியன காண்டலில் பெரு வேட்கை; அறிவாராய்ச்சியில் எல்லையில்லா ஆர்வப் பெருக்கு-இவ்வளவு அரும் பெருங்குண நலங்களும் வாய்ந்த பெருந்திருவினர் எப்பணியில் புகுந்தால் என்ன? எந்த இடத்தில் எந்தச் சூழலில் இருந்தால் என்ன? காலமும் இடமும் சூழலும் கைகட்டி நின்று ‘மடி தற்றுத்’ துணை செய்தலுக்கு ஐயமுண்டோ?

ளமையிலேயே

6

திருவரங்கனார் ஈழத்தில் இருந்த காலையில் உழைத்த உழைப்பை உடனிருந்து கண்டவர், பின்னாளில் மதுரைத் திருஞான சம்பந்தர் திருமடத் தலைவராகத் திகழ்ந்த திரு- சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களாவர். அவர்கள் அரங்கரைப் பற்றிய நினைவினை ஒரு முறைக்கு இருமுறை நினைவு கூர்ந்து எழுதினார் :

"நம் பேரன்பர் திருவரங்கம்பிள்ளை அவர்கள், எடுத்த காரியத்தை முற்றுப்பெறச் செய்வதில் சலியா உழைப்பும், தளரா ஊக்கமும், அயரா ஆர்வமும், அஞ்சா நெஞ்சமும், தமிழ்ப்பற்றும் இறைவனிடத்தில் மாறாத அன்பும் கொண்டவர்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டும் தூங்கி, பாக்கி 21 மணி நேரமும் உழைத்து வந்த காலமும் உண்டு’ என்று கழகத்தில் 1008வது வெளியீட்டு விழா மலருக்கு எழுதிய வாழ்த்துரையில் தெரிவிக்கிறார். அதன் மேலும் விளக்கமாகக் கழகப் பொன் விழா வாழ்த்தில் தெரிவித்துள்ளார் மதுரை அடிகளார்.

66

க் கழகத்திற்குப் பங்குகள் சேர்த்து வரையறுக்கப்பெற்ற நிறுவனமாக உருவாக்க அதற்கென்றே அவதரித்த நமது மதிப்பிற்குரிய திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளை அவர்கள் எவ்வளவு பாடுபாட்டார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் இரவு மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவதும் மற்ற 21 மணி நேரமும் அயராது