உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

ழைத்து வந்ததும் நாம் நேரில் கண்டு வியப்புற்றிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சின உழைப்பால் பின்னர் அவர்கள் உடல் சிறிது நலிவுற்றதும் உண்டு. ஆனால்,

‘செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலா தார்’

என்ற திருக்குறளையும்,

‘துன்பம் உறவனினும் செய்க துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினை’

என்ற திருக்குறளையும் அவர்கள் நடைமுறையில் கையாண்டு வந்ததன் காரணத்தினாலேதான் இந்தக் கழகத்தை வெற்றி கரமாக அவர்கள் நடத்திவர முடிந்தது.

وو

திருவரங்கரின் வளமான இளநெஞ்சில் அழகிய சுந்தரம் பிள்ளை, ‘மறைமலை' என்னும் வித்தினை ஊன்றினார் அல்லரோ! அவ்வித்து முளைத்து இலையொடு வெளிப்படும் வாய்ப்பும் அடுத்தே நிகழ்ந்தது. அடிகளார் எழுதிய நூல்களைத் திருவரங்கர் தருவித்தார். அவற்றைப் 'பருகுவன் அன்ன ஆர்வத்தராய்ப்' பயின்றார்; பயின்ற செய்திகளை வாளா ஒழிய விடாமல் தம்மொத்தவர்க்கும், உயர்ந்தவர்க்கும் பயிற்றினார். இயல்பிலேயே, “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது, நாதன் நாமம் நமச்சியாயவே” என்று கண்டவர் அரங்கர். அதனை அடைவதற்குக் குருமூர்த்தமாய் எழுந்தருளி இருப்பவர் தவத்திரு மறைமலையடிகளாரே என்னும் தெளிவுக்கு வந்தார்! ஆதலால், தம் நெஞ்சத் தாமரை இருப்பில் அடிகளாரை இருத்தி வைத்து வழிபட்டார். காணாமல் கண்டடைந்த குருமணியைக் கண்ணுறக் கண்டுகளிப்புறும் காதல் பெருகிற்று. இதனைப் பெருக்கியதில் மீண்டும் தூத்துக் குடிக்கும், அழகிய சுந்தரனார்க்கும் பெரும் பங்கு உண்டு.

1910ஆம் ஆண்டு முதல் தவத்திரு மறைமலையடிகளார் சில ஆண்டுகள் தொடர்ந்து தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் ஆண்டு விழாத் தலைமை பூண்டார்; தலைமைக்கண், அரும்பெரும் பொழிவுகள் செய்தார்; பிறர் பொழிவு தொடர்பாகவும் நிறைவுரை யாற்றினார். அடிகளார் வருகை முதல் விடைபெறல் ஈறாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், வழங்கிய அமுத மொழி களையும் தூத்துக்குடி அன்பர்கள் வழியாகவும், குறிப்பாக அழகிய சுந்தரர் வழியாகவும் அரங்கர் அறிந்தார். அடிக்கடி