உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

وو

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

25

அவற்றைக் கேள்வியுற்று, “என்று கொலோ கண்குளிரக் காணு நாளே என்று ஏக்குற்றார். இந் நிலையில் அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்துப் பயன் கொள்ளும் ஒரு முடிவுக்கு வந்தார்.

திருவரங்கர், உண்மைத் தமிழர், உழுவலன்பர், உரிமைத் தொடர்பர், வணிகப் பெருமக்கள், வள்ளன்மைச் செல்வர், பட்டம் பதவி வீறுடைய தமிழ் அறிஞர் ஆகியவர்களோடு அணுக்கத் தொடர்பு கொண்டு அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்துப் பேறு கொள்ளும் விழுப்பத்தை எடுத்துரைத்தார். நன்மக்கள் கூட்டம் நயந்து பாராட்டியது. அரங்கனார் ஆர்வத்திற்கு அரணாகிப் புலமைத் துணையும் பொருள் துணையும் புரியக் கிளர்ந்தது. அரங்கனார் விழைவு வெற்றிக் கனியாக இலங்கலாயிற்று.

பல்லாவரத்தில்

இருந்து கொழும்புச் செலவு மேற்கொண்ட அடிகளார், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் தலைமையேற்கும் பொறுப்பும் ஏற்றுக் காண்டிருந்தார். 20-12-1913, 21-12-1913 ஆகிய இரண்டு நாள்களும் அரிய பொழிவுகள் செய்தார். 24-12-1913இல் தூத்துக்குடி கீழூர் சிவஞானப் பிரகாச சபை விழாவில், சென்னை கிருட்டிணவேணி அம்மையார் புலமைத் திறனைப் பாராட்டிப் ‘பண்டிதை’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். 4-1-1914இல் தூத்துக்குடியில் திருஞான சம்பந்தரைப் பற்றிப் பொழிந்தார். 6-1-1914 மாலையில் தூத்துக்குடியில் இருந்து கப்பலேறிக் கொழும்புக்குச் சென்றார். 7-1-1914 காலையில் கொழும்புத் துறையை அடைந்தார் அடிகள்.