உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

27

பருங்கூட்டமாகத் திரண்டது. உண்மையான சமய அன்பர்கள் கூட்டம் அது. கொழும்பு நகரில் பெருமை பொருந்திய முதலியார் கைலாச பிள்ளை, அடிகளைப் பற்றிய அருமை பெருமைகளை அவையோர்க்கு எடுத்துக்கூறி வரவேற்றார்.

“பொன்மேனியில்

காவியாடை ஒளிரும் தோற்றம், முக்காடிட்ட தாமரை போன்ற திருமுகப் பொலிவு, இனிமையே உருவெடுத்தாலனைய சாயல், ஆய எழில் வடிவாம் அடிகளின் திருமுகத்தை நோக்கியபடியே அவையோர் அசையாமல் விழித்த இமை மூடா யோகியர் ஆனார். எங்கும் மலைக்காட்டின் அமைதி. அடிகள் புனிதவாய் மலர்ந்து, கண்மூடிக், கை குவித்து மனமுருக- நீர்வார-கடவுள் வாழ்த்து, ஞானசம்பந்தர் வாழ்த்துகளைப் பாடி முடித்தார்.

66

அடிகளின் இசை இனிமை, இனிமைக்கு இறைவனாகும். அவ்வின்னோசை இன்ப வெள்ளத்தில் படிந்த அவையோர் தம்மையும் உலகையும் உணர்ந்திலர். இதுவரை கண்டும் கேட்டு மிராத சுவைத்திராத இன்ப நிலையடைந்தனர். அவையோர் உணர்ச்சி பேசுபவரையும் பற்றிக்கொள்ளும் அல்லவா? பேரின்ப உலகத்துக் குயில் ‘அன்பர்களே' என்று பேசத் தொடங்கியது. அவ்வளவுதான்! அவையோர் தேனுண்ட வண்டென மேலும் ன்ப மயக்கத்தில் கலைமகள் விழாப் பதுமைகளாய்ச் சமைந்தனர். எல்லோருடைய அறிவும் அடிகள் அறிவில் ஒன்றிவிட்டது. கற்பனை கடந்த அடிகளின் சொற்பொழிவின் பதிப்பில் திளைக்கலாயிற்று.

"பேசத் தொடங்கிய தமிழ்ப் பெருமான்- சிவபெருமான் எதுபற்றிப் பேசியிருப்பார்? கருத வேண்டியதில்லை. திருஞானசம்பந்தரைப் பற்றித்தான். அடிகள் தம் ஆருயிரினும் சிறந்த அப்பிள்ளைப் பெருமானைப்பற்றிப் பேசி முடித்தனர். முதல் வெற்றி. முழு வெற்றி. வெற்றி, வெற்றி பெற வேண்டு மென்று தவங்கிடந்தது, அதன் பயனாய் அடிகள் பேச்சில் கலந்து வெற்றி பெற்றதென்றே சொல்ல வேண்டும். இன்பமோ துன்பமோ சொல்லியன்றித் தீராது. அடிகளின் சொற்பொழி வின்பத்தில் மகிழ்ந்தவர்கள் அம் மகிழ்ச்சியைத் தம்முள் அடக்கும் ஆற்றலற்றவராயினர். அடிகள் பேச்சு அவ்வளவு உயர்ந்தது. மூவுலகத்தும் கடவுளிடத்துங்கூட அவ்வளவின்பம் இருக்காது. ஆகவே, மறுநாள் அடிகள் இருக்குமிடத்தை எண்ணற்ற அன்பர்கள் நாளெல்லாம் சூழ்ந்துகொண்டனர். அடிகளும் சளைக்கவில்லை. வந்தவர்களிடம் இன்பமுறப் பேசினார். மே மலும் அவர்கள் இன்புற்றுச் சென்றனர்.’ (மறைமலையடிகள் வரலாறு 205 - 6)