உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

29

றைவனருளை டையறாது இழுக்கவல்லன. அவர்கள் அத்திருவருட் பேற்றால் வரும் எல்லாச் செல்வங்களையும் பெற்று எம்னோர்க்கு உறுதுணையாய் இனிது வாழ்வார்களாக என்று வாழ்த்துகின்றோம். இனி ஸ்ரீமான்

திருவரங்கம் பிள்ளையின் வேண்டுகோட் கிணங்கிப் புண்ணியத் திருவாளரான குலசேகரன்பட்டினம் ஸ்ரீமான் ரா. ப. செந்திலாறுமுகம் பிள்ளையர்கள் எழுநூற்றைம்பது ரூபாவும், தயாளகுணப் பிரபுவான கு. ப. பெரியநாயகம் பிள்ளையவர்கள் ஐந்நூறு ரூபாவும் நமது அச்சுக்கூடத்திற்கென்று தருமமாக உதவி, உடனே உயர்ந்த புதிய அச்சியந்திரம் வாங்கும்படி முன் முயற்சியுங் காட்டிய அரும்பெருந் தகைமை எழுமை எழு பிறப்பும் மறக்கற்பாலதன்று.'

وو

அச்சகத் திறப்பு விழா அறிக்கையிலும் அரங்கரை அடிகள் நினைவு கூர்ந்தார் :

நமக்கே சொந்தமாக ஓர் அச்சுக்கூடம் திறக்க

L

ம்

வேண்டுமென்று பல ஆண்டுகளாக உள்ளத்திற் கொண்டிருந்த பெருவிருப்பத்தை எல்லா நலத்திற்கும் உறைவிடமான நம் ஆண்டவன் திருவருளும் அவ்வருள்வழி நிற்பவரான அன்பர் ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையவர்களும் நிறைவேறச் செய்த பேருதவியினால் சாலிவாகனசகம் 1838 நள வரு கார்த்திகை மாதம் 26ந் தேதி (12 -12 - 1916) புதன் கிழமை காலையில் ஏழரை மணிக்குப்பின் எட்டு மணிக்குள்ளாகப் பல்லாவரம் நமது சமரச சன்மார்க்க நிலையத்தின்கண் நமக்கே சொந்தமான ‘டி.எம்’ என்னும் பெயர் வாய்ந்த நம் அச்சுக்கூடம் சைவ மங்களக் கிரியைகளோடு

நிலைபெறுத்தப்பட்டுச்

திறக்கப்படலாயிற்று.'

وو

66

அச்சகத் திறப்பு விழா நிகழ்ந்த அன்றும், அதற்கு உதவியாம் பொருட்டுத், திருவரங்கர் தாம் நன்கொடையாகத் தண்டிய ரூபா அறுநூறை விடுத்திருந்தார். இத்தகைய அருமையை உணர்ந்ததால்தான், அடிகட்கு உதவச் சிவபிரானால் அனுப்பப்பட்டவர் திருவரங்கம் பிள்ளையாவர்” என்றும் (மறைமலையடிகள் வரலாறு 199) “திருவரங்கர் உதவியில்லா விட்டால் அடிகள் கவலையின்றி இன்பமாய் - சிறப்புடன் தம்மறிவினால் தமிழகத்தினை எ உயர்த்திருக்க முடியுமா?" என்றும் (மேற்படி 250) நேரில் உணர்ந்தவர் பாராட்டி மகிழ்ந்தனர்.