உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ல்

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தொடர்ந்து அடிகளார்க்கு முட்டுப்பாடு இன்றி உதவிய திருவரங்கர் அடிகளாரை மீண்டும் கொழும்புக்கு அழைத்தார். 21-5-1917இல் கொழும்புக்குப் புறப்பட்ட அடிகளார் 28-9-1917இல் மீண்டார். ஏறத்தாழ நான்கு திங்களாக அமைந்த இச் சுற்றுலாவில் அடிகளின் புலமைச் செல்வத்தை ஈழம் பெற்றுப் பேரின்பம் துய்க்கவும், ஈழப் பெருமக்களின் நன்கொடைச் செல்வத்தால் அடிகளார் தம் தவப்பெரும் பணிகளை மேலும் மேலும் சிறக்கச் செய்யவும் வாய்த்தது. அன்றியும் அரங்கரின் அருமை இளவல் வ. சுப்பையா அவர்களும் அடிகளாருடன் அணுக்கராய் அன்பராய்த் திகழவும் வாய்த்தது.

இவ்விரண்டாஞ் சுற்றுலாவில் அடிகளார்க்கு வேண்டும் நலங்களெல்லாம் சூழ்ந்த பேணியதுடன், நன்கொடை தண்டி ரூ. 1797உம் திருவரங்கர் வழங்கினார். அவர்தம் ஆர்வத் தொண்டில் முழுதுற ஆழ்ந்த அடிகளார் ஒரு பெருங் கூட்டத்தில் “நீவிர் நாயன்மார் அறுபத்து மூவரை அறிவீர்; அறுபத்துநான்காம் நாயனார் ஒருவருளார். அவரே இத் திருவரங்கர்” என்று பேரன்பு தழைக்கப் பாராட்டி மகிழ்ந்தார். அரங்கர், தொண்டராய் அடிகளார் தொண்டர்சீர் பரவுவாராய் அமைந்த பெற்றி இது.

அடிகளாரும் அரங்கரும் அடிக்கடி கடிதத் தொடர்பு கொண்டனர். அறிவுத் தொண்டில் தலைப்பட்ட அவர்கள் உள்ளம் ஆர்வத்தால் உந்தப்பெற்று அன்புப் பிணைப்பில் ஒன்றியது. எட்டா இறையோடும் மாந்தரை இணைத்து வைக்கும் அன்புப்பெருக்கு எவரையே இணைக்காது? இருபாலும் பெருகிய அன்பின் முகிழ்ப்பு, தெய்வத் திருக்கோலமாய் உள்ளெலாம் அள்ளூறி நின்றது.

66

‘அன்புருவான செல்வச் சிருஞ்சீவி திருவரங்கம் பிள்ளை அவர்களுக்குச் சிவபெருமான் றிருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக. நமது அச்சுக் கூடத்திற்குப் பொருளுதவி செய்ய இசைந்த அன்பர்களிடம் தாங்கள் அன்பு கூர்ந்து திரட்டியனுப்பிய ரூபா நூறும் வந்தது. பிறர்க்கென வாழும் பெருந்தகைமை வாய்ந்த தங்கள் பேருள்ளத்தில் எழுந்தருளி யிருக்கும் நம் சிவபெருமான் தங்களுக்கு நல்வாழ் நாளையும் களங்கமற்ற தூய உதவி நினைவுகளையும் மேன்மேல் அருளித் தங்களை எல்லா வகையிலும் மேம்படச் செய்வானாக. தாங்கள் இன்னுஞ் சிறிது விடாது முயன்றால் தொகை விரைவிற்றிரளும். நம் கவலைகளெல்லாம் அகலும்; உலகத்திற் றமிழும் சைவமும் நத்தாமணி விளக்கங்களாய்த் திகழும். தங்கள் புகழும்