உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

31

புண்ணியமுங் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் திகழும்” என்று அடிகளார் 29-6-1916இல் அரங்கருக்குக் கடிதம் வரைந்தார். பாராட்டும் நன்றியும் பலபட உரைத்தார்.

இலங்கைக்குச் சென்று இரண்டாம் சுற்றுலாவை முடித்துக் கொண்டு பல்லாவரம் மீண்ட அடிகளார் 6-8-1917இல் "எனதிரு கண்மணியாய் அன்புருவாய் விளங்கும் செல்வச் சீரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையவர்கட்கு நம் பெருமான் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக.

“தங்கள் பேரன்பின் பெருக்காலும் நம் மிறைவன் திருவருள் வளத்தாலும் சுகமாக இங்கு வந்து சேர்ந்தேன். நம் பெருமான் திருவருட் பேற்றையும் சைவ சமய விளக்கத்தையு மேயல்லாமல் பிறிதெதனையும் கைம்மாறாக நோக்காமல் உண்மையன்போடு உழைத்து வரும் தங்கள் அரும்பெருஞ் செயல் உலகின்கண் மற்றெங்கும் காண்டல் அரிதரிது. தங்களைக் கொண்டே நமது சிவஞான தர்மம் இனிது நடைபெறச் செய்துவரும் திருவருளுக்கு நமது வணக்கம் உரியது" என்று ஆராவிருப்பார் எழுதினார்.

66

.

திருவரங்கர் தொண்டராகவும் புரவலராகவும் அறிவறிந்த அன்பராகவும் இருப்பதுடன் தாம் பெற்ற இருப்பதுடன் தாம் பெற்ற அறிவுநலத்தை மேடைப் பொழிவின் வழியே வாரி வழங்கும் வள்ளலாகவும் திகழ வேண்டும் என அடிகளார் எண்ணினார்; மிகமிக விரும்பினார்; அதற்குத் தாம் உதவும் முயற்சியும் மேற்கொண்டார். 'இரண்டு மூன்று நாட்களுக்குமுன் உபந்யாச விஷயம் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அது வந்துசேர்ந்த விவரம் உடனே தெரிவியுங்கள். இங்ஙனமே மாதம் ஒவ்வொன்று உங்கட்கு எழுதியனுப்புவேன். நீங்கள் திருவருட்டிறத்தால் நன்கு உபந்நியசிக்கும் ஆற்றல் பெற்றுத் தமிழையும் சைவத்தி னையும் எங்கும் விளங்கச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது பெருங் கோரிக்கை” என்று எழுதி வழிகாட்டினார். ஆனால் அரங்கர் என்றும் செயற்கள வீரராகத் திகழ்ந்தாரே யன்றிச் சொற்கள வீரராகத் தோன்றினார் அல்லர். ஒருவேளை, சொல்லாண்மையினும் செயலாண்மையே அழியாதது என்றும், செயலாண்மையில் நிலைபெறுத்தாத சொல்லாண்மையால் பயனேதும் இல்லையே என்றும் அரங்கர் உள்ளம் திட்டப் படுத்தியிருக்கக் கூடும்! ஆகலின், அரங்கர் தம் வாழ்நாள் முழுமையும் சொற்களத்தில் தம்மைப் புகுத்திக்கொண்டார் அல்லர்.