உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

பலபல சொற்பொழிகள் நடக்க ஏற்பாடு செய்துவந்த அரங்கர் தாம் சொற்பொழிவு செய்தலில் நாட்டஞ் செலுத்த வில்லை எனினும், கடிதம் எழுதுதலில் பேரார்வம் கொண்டி ருந்தார். கடிதம் எழுதுதலைத் தனிப் பெருங் கலையாகப் போற்றினார். அவர்தம் எழுத்தும் அடித்தல் திருத்தல் இன்றி முத்துக்கோவை போல் ஓர் ஒழுங்குபட இருக்கும். தாளின் மேலே கையை வைத்து எழுதத் தொடங்கினால் ஒரு சிறு தடையும் இல்லாமல் அப்படியே தாளின் அடிப்பகுதி வரை விரைந்து எழுதி முடிக்கும் திறம் அரங்கர்க்கு இயல்பாய் இருந்தது. நொடிப் பொழுதும், இடைத்தடையுற்றுக் கடிதம் கணங்காது! கடிதச் செய்தியும், இளமைத் துடிப்பும், முதுமைத் திறமும் ஒருங்கே காட்டவல்லதாய் அமைந்திருக்கும். பயனற்ற செய்தி ஒன்றும் அவர் கடிதத்தில் இடம் பெறுவதே இல்லை. னிய தம்பியார் வ. சு. விற்கு 14-8-1913இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் :

66

நீ இனிமேல் தமிழ் எழுத்துகளை ஒவ்வொரு வரையின் மேலும் இலக்கண வழுவின்றி fullstop, cama, semicolan, colan முதலிய புள்ளிகள் போட வேண்டிய இடங்களில் போட்டும், வெவ்வேறு விஷயமாகயிருந்தால் வெவ்வேறு பாராப் போட்ெ ழுதியும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாயும் தனித் தனியாயும் கூட்டெழுத்து எழுதாமலும் எழுதப் பழக வேண்டும்.”

எழுத்துக்களைப்பற்றிக் கூறி நெறிப்படுத்தும் திருவரங்கர் கொள்ளத்தக்க நன்னெறிகள் சிலவற்றையும் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார் :

66

'நித்தியப்படி தேகாப்பியாசமும் செய்துவர வேண்டும். உன் வேலைகளை Time Table போட்டு ஒழுங்காய் (Regular) அணுகவும் பிசகாமல் நடந்து வருவாயென நம்புகிறேன். Libraryயில் News paper எடுத்து அதை வாசித்து வரவேண்டும். அதுவும் விருத்தியை உண்டுபண்ணும்.

"OmI am very active strong & healthy Sivayanama" இதனை எந்த நாளும் காலையில் 15 நிமிஷம் மனதில் நினைத்து ஒரே சிந்தனை செய்து வருவாயானால் நல்ல சுகமும், பலமும், மிகுந்த ஞாபக சக்தியும் அடைவாய். அதாவது தனியாக ஓர் அறையில் இருந்து ருந்து மனத்தை ஓர்மையோடு செலுத்தி உச்சாடனம் பண்ணிக் கொண்டு வருக.