உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

33

தம்பியார் வ. சு.வுக்கு அரங்கர் இதனை 14-8-1913இல் எழுதினார். அப்பொழுது தம்பியார் அகவை 16. அரங்கர் அகவை 23. ஏழாண்டு மூத்த தமையனாராகவோ அரங்கர் எழுதுகின்றார்? தந்தை நிலையில் இருந்து காக்கும், தலைமகனா ராகவன்றோ எழுதுகின்றார்! தந்தையார் மறையும்போது சுட்டிக் கூறிய குறிப்பு அவர் உள்ளத்தின் ஆழத்துள் ஆழமாய்ப் பதிந்து கிடந்தது! “நம் பெருங் குடும்பத்தைத் தொடக்கமுதல் நானே பாதுகாக்கக் கூடியவன் என்று ஐயர் அவர்கள் இறக்கும் போது சுட்டிக் காட்டி அறிவுறுத்திய அறிவுரையைச் சிரமேற் கொண்டு காண்டு"தாமே குடும்பக் கடமைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு அரங்கர் செய்தாரகலின், தம் சீரிளமைப் பருவத்திலேயே செழுமுதியராய் அறிவுறுத்தி வழிகாட்டும் திறம் பெற்றார் எனல் அமையும்.