உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெருந்தகை வள்ளல்

திருவரங்கனார் உள்ளத்தில் அடிகளார் கோயில் காண்ட நாள் முதல், எவ்வெவ் வகையால் எல்லாம் அவர்க்கு உதவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டே இருந்தார். அவ்வாறு திட்டமிட்டுச் செய்தவற்றுள் இரண்டனைச் சுட்டல் சாலும். ஒன்று ‘திருசங்கர் கம்பெனி' என்னும் பெயரால் புத்தக நிலையம் ஒன்று தொடங்கியது; மற்றொன்று அடிகளாரின் ஆய்வுக்கு உதவும் வகையில் திங்கள் தோறும் ஒரு தொகை கிடைக்குமாறு வகை செய்தது.

ப்

திருவரங்கரின் கெழுதகை நண்பர் வி. சங்கர நாராயணபிள்ளை என்பார். தம் பெயரையும் சுருக்கி இணைத்துத் ‘திருசங்கர் கம்பெனி' என்னும் பெயரால் 1917இல் ஒரு புத்தக நிறுவனத்தைத் தொடங்கினார் திருவர ருவரங்கர். புத்தக நிறுவனம் பொதுவாக அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி விற்று வந்தது. என்றாலும், அடிகளார் நூல்களை இலங்கையில் பெரிதும் பரப்பி அடிகளுக்கு உதவி செய்தற்காகவே தோன்றியதாகும். பின்னர் இந் நிறுவனத்தின் வழியாகவே செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் களஞ்சியம் என்னும் பெயரால் அடிகளார் வரைந்த திருவாசக விரிவுரை திங்கள் வெளியீடாக வெளிப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவரங்கரும் சங்கரநாராயணரும் இணைந்து செய்த ச்செயல் போலவே, திருவரங்கரும் அவர்தம் பேரன்பர் ராம. ப. செந்திலாறுமுகம் அவர்களும் இணைந்து செய்த உதவியே மற்றொன்று ஆகும். அடிகளார் நூலாராய்ச்சி செய்தல், புராணங்களுக்கு உரை வரைதல் ஆகிய ஆக்கப் பணிகள் செய்யுமாறு கொழும்பு வணிகப் பெருமக்களிடம் திங்கள்வாரி நன்கொடைத் திட்டம் ஒன்றைத் தொடங்கி உதவினார். அதன்படி, 1918 மே வரை ரூ. 1599-8-0 கிடைத்தது! இவ்வாறு காலத்தால் உதவும் பேறு திருவரங்கனார்க்கு அன்றி எவர்க்கே வாய்த்தது? அதனைப் பெற்று மகிழும் பேறும் அடிகளார்க்கு அன்றி எவர்க்கே வாய்த்தது? இவர்கள் தொடர்பே திருவருள் தொடர்பு போலும்!