உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

35

ஈழத்து வாழ்வையெல்லாம் அடிகளார் தொண்டுக்கே அரங்கர் ஆட்படுத்திவிட்டாரோ என்னும் நினைவு எழும்பலாம். ஆனால் அரங்கர் தாம் புகுந்த வணிக நிறுவனக் கடனை மறப்பாரோ? தம் குடும்பக் கடனை மறப்பாரோ? திருவள்ளுவர் அறத்துப்பால் ஒன்றனோடு அமையாமல், பொருட்பாலும் ன்பத்துப்பாலும் ஓதிய சீர்மையை உ உணராதவரோ திருவரங்கர்! முப்பாலும் போற்றி ஒழுகுதலே முறைமை எனக் கொண்டமையார், அடிகளார்க்கு உதவுதலை அறத்துப் பாலாய்த், தாம் புகுந்து செய்யும் வணிகப் பணியைப் பொருட்பாலாய்த், தம் குடும்பக் கடமை புரிதலை இன்பத்துப் பாலாய் மேற்கொண்டு ஒவ்வொன்றும் குறைவுறா வண்ணம் நிறைவுறுத்தினார். வாய், பேசினாலும், கை, ஆடி அசைந்தாலும், கண், வழிக் காட்சியைக் கண்டாலும், கருத்தெல்லாம் தலைமேல் இருக்கும் தண்ணீர்க்குடத்தின் மேலே இருக்கக் குடங்கொண்டு நீர் சுமந்து செல்வாரைக் கண்டுளோம் அல்லமோ! அவ்வாறு அரங்கர் அவ்வக் கட மைகளைப் புரிதலில் புரிதலில் கருத்தாகவே இருந்தார்.

திக்கற்ற நிலையில் இருக்கும் தம் குடும்பத்திற்குத் தம்மால் இயன்ற அளவும் முயன்று ஈட்டிய பொருளைக் காலம் தவறாமல் விடுத்து வந்தார். அவர் செய்த உதவியே அன்னையார்க்கு ஆறுதலாயிற்று! தம் அருமை மகனார் தம் குடும்பச் சுமையைத் தாங்கித் தக்க வகையில் உயர்த்தியே தீர்வார் என்னும் முழுதுறு நம்பிக்கையை ஊட்டி அவர்க்கு உவகை தந்தது. உடன் பிறந்த ளையாருள் சுப்பையாவின் படிப்பில் தனி அக்கறை காட்டினார் அரங்கர். தந்தையார் மறைவால், தம் கல்வி நின்றுவிட்டது போல் தம் தம்பியார்க்கும் ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சினார். ஆதலால் அவர் கல்விக்குத் தாம் செய்ய வேண்டிய பொருளுதவிகளையெல்லாம் தட்டாமல் விடுத்தார். இளவல் சுப்பையாவுக்கே, தாம் குடும்பத்திற்கு விடுக்கும் பணத்தையெல்லாம் விடுத்தார். திட்டமிட்டுச் செலவிடல், சிக்கனத்தைப் பேணல், தவறாது வரவு செலவு எழுதுதல், கடமை தவறாமை என்பவற்றை யெல்லாம் சிற்றிளம் பருவத்திலேயே இளவல் சுப்பையா எய்துதற்குத் தோன்றாத் துணையாய் நின்று வழிகாட்டினார்.

ளவல் வ. சு. பாளையில் உள்ள தூய சவேரியார் உயர்பள்ளியில் பயின்றார். 1916ஆம் ஆண்டு பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அப்போது வாய்ப்பாக இருந்த